சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிலுவைப்பட்டி மைக்கேல் முதல்... திண்டுக்கல் நிர்மலா வரை- 25 ஆண்டுகளாக தொடரும் பழிக்கு பழி கொலைகள்!

Google Oneindia Tamil News

சென்னை: தென் தமிழகத்தில் மூலக்கரை பண்ணையார் தரப்புக்கும் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபாண்டியன் தரப்புக்கும் இடையேயான பழிக்கு பழி கொலைகள் 25 ஆண்டுகளாக இன்று திண்டுக்கல் நிர்மலா வரை நீடித்து கொண்டிருக்கிறது.

Recommended Video

    அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்… பதற வைக்கும் பயங்கரம்… அச்சத்தில் மக்கள்

    1990களின் தொடக்கத்தில் மூலக்கரை சிவசுப்பிரமணிய நாடார், அவரது மகன் அசுபதி பண்ணையாருக்கும் புல்லாவெளி கிராமத்தினருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தேவேந்திர குல வேளாளர்களின் தலைவரான பசுபதி பாண்டியன் இதில் தலையிட்டார்.

    வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

    சிலுவைபட்டி மைக்கேல் என்பவர் 1990-ல் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பசுபதி பாண்டியன் சேர்க்கப்படுகிறார். பண்ணையார் தரப்பை சேர்ந்த மைக்கேலை பசுபதி பாண்டியன் தரப்பு போட்டுத் தள்ளியது என்றது போலீஸ். அதே 1990-ம் ஆண்டு தூத்துக்குடி அருகே கிருஷ்ணராஜபுரம் அந்தோணிசாமி கொல்லப்படுகிறார். இந்த வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது.

    அசுபதி பண்ணையார் படுகொலை

    அசுபதி பண்ணையார் படுகொலை

    இதன் உச்சமாக 1993-ம் ஆண்டு ஜனவரி 24-ல் மூலக்கரை அசுபதி பண்ணையார் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப் பின் இருதரப்புக்கும் இடையேயான மோதல் உக்கிரத்தைத் தொட்டது. அதே 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி மூலக்கரை சிவசுப்பிரமணிய நாடாரும் கொல்லப்பட்டார். இதையடுத்து சிவசுப்பிரமணிய நாடாரின் பேரன்களாண வெங்கடேஷ் பண்ணையார், சுபாஷ் பண்ணையார், பழிக்கு பழிவாங்க களத்தில் இறங்குகின்றனர். பசுபதி பாண்டியனை கொலை செய்ய தொடர் முயற்சிகளை பண்ணையார் தரப்பு மேற்கொண்டது.

    வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்ட்டர்

    வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்ட்டர்

    இதில் 2003-ம் ஆண்டு சென்னையில் வெங்கடேஷ் பண்ணையார் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னர் சுபாஷ் பண்ணையார் தலைமையில் இந்த குழு இயங்க தொடங்கியது. கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் பசுபதி பாண்டியன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. இதில் பசுபதி பாண்டியன் மனைவி ஜெசிந்தா கொல்லப்பட்டார்.

    பசுபதி பாண்டியன் படுகொலை

    பசுபதி பாண்டியன் படுகொலை

    கடந்த 2012-ல் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியனை மூலக்கரை பண்ணையார் தரப்பு படுகொலை செய்தது. பின்னர் பொன்.இசக்கி, அரிஸ்டாட்டில், பாம் கண்ணன், காயல் பாலகிருஷ்ணன், பீர் முகமது என பசுபதி பாண்டியன் தரப்பை பலி எடுத்தது பண்ணையார் தரப்பு.

    தலையை தனியாக வெட்டி வெறிச்செயல்

    தலையை தனியாக வெட்டி வெறிச்செயல்

    இதற்கு பழிவாங்க ஆறுமுகச்சாமி, அய்யாக்குட்டி.. என பண்ணையார் தரப்பை படுகொலை செய்தது பசுபதி பாண்டியன். இங்கிருந்து தலைகளை வெட்டி எடுத்துச் செல்லும் புதிய பாணியை கொலையாளிகள் கையில் எடுத்தனர். வெட்டி எடுக்கப்பட்ட தலையை பசுபதி பாண்டியன் படம் பொறித்த கொடிக்கம்பங்களின் கீழ் வைக்க தொடங்கினர். இதற்கு பலியாக பசுபதி பாண்டியனின் வலது கரமான சிங்காரத்தை காவு கொண்டது பண்ணையார் தரப்பு.

    திண்டுக்கல் நிர்மலா தேவி

    திண்டுக்கல் நிர்மலா தேவி

    இப்போது பண்ணையார் தரப்பின் உளவாளியாக இருந்து, பசுபதி பாண்டியன் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திண்டுக்கல் நந்தவனப்படி நிர்மலாவின் கதையை முடித்திருக்கிறார்கள். நிர்மலாவின் தலையை வெட்டி எடுத்து திண்டுக்கல் நந்தவனப்படி பசுபதி பாண்டியன் வீட்டு முன்னர் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள். அதாவது பசுபதி பாண்டியனை காட்டிக் கொடுத்ததால் பழிக்கு பழிவாங்கிவிட்டோம் என கொலையாளிகள் அறிவிக்கிறார்களாம். இப்படித்தான் 25 ஆண்டுகளாக தென் தமிழகத்தை தகிக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த பழிக்கு பழி கொலைகள்.

    English summary
    Here is a Timeline of 25 years Souther Tamilnadu Murders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X