சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடிக்கு அதிகாரம் போச்சு.. எங்கே ஆரம்பித்து எப்படி போய் நிற்கிறது? பார்த்தீர்களா!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை அதிமுகவில் நடைபெற்று வரும் சர்ச்சைகளையும், மாற்றங்களையும் பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியது முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரு தரப்பும் வேட்பாளரை அறிவித்துள்ளது வரை, அதிமுக கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

Timeline of AIADMK General Committee meeting case to Erode East By Poll

February 2023
  • தேர்தல் ஆணையம் பதில்
    இதனைத் தொடர்ந்து, பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இடைகால மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில், எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் 2022 ஜூலை 11ல் நடத்திய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
January 2023
  • எடப்பாடி பழனிசாமி முறையீட்டு மனு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வசதியாக, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதிகளிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டனர். இடைதேர்தலில் அதிமுகவின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஈ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மூன்று நாட்களில் ஓபிஎஸ் தரப்பும், தேர்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
    2023 ஜனவரி 18: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 2023 ஜனவரி 20: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் விருப்பத்தை ஏற்பதாக ஜிகே வாசன் அறிவித்தார். இதன் மூலம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. 2023 ஜனவரி 21: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பாஜக போட்டியிட விரும்பினால், ஓபிஎஸ் அணி ஆதரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
September 2022
  • உச்சநீதிமன்றம்
    2022 செப்டம்பர் 2: ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பரபரப்பு தீர்ப்பை அளித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்தார். 2023 ஜனவரி 10: ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிவடைந்து எழுத்துப் பூர்வமான வாதம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
August 2022
  • உயர்நீதிமன்றம்
    2022 ஆகஸ்ட் 17: ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிமுகவை ஓபிஎஸ் - இபிஎஸ் என்ற இரட்டை தலைமைகளே இயக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். 2022 ஆகஸ்ட் 18: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. 2022 ஆகஸ்ட் 25: இருதரப்பு வாதங்களையும் கேட்ட ட நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
July 2022
  • ஜூலை 11 பொதுக்குழு
    பொதுக்குழுவுக்கு தடையில்லை என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தனர்.
June 2022
  • ஜூன் பொதுக்குழு
    பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ் - ஓபிஎஸ் வந்தனர். இந்த பொதுக்குழுவில் தமிழ்மகன் உசேன், நிரந்தர அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. பின்னர், பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர். மீண்டும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  • அதிமுக
    2022 ஜூன் 2 : அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ல் தற்காலிக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிவித்தனர். 2022 ஜூன் 14 : அதிமுக செயற்குழு, பொதுக்குழு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பெரும்பாலானோர் பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது 2022 ஜூன் 22: சென்னையை அடுத்துள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓபிஎஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் வழங்கிய மனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்றும், 23 தீர்மானங்களை மட்டுமே விவாதிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

English summary
The Election Commission has told the Supreme Court that the resolutions passed in the AIADMK general meeting held on July 11, 2022 were not accepted. At this stage, we can see the path taken by AIADMK since the issue of single leadership of AIADMK started until both parties announced their candidates in the Erode East by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X