சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெ. மரணம்- சமாதி தர்மயுத்தம்.. கூவத்தூர் கூத்து- ஓபிஎஸ், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் பாதை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை...

Timeline of OPS and 11 AIADMK MLAs disqualification case

2016 டிசம்பர் 5: சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா காலமானார்

2016 டிசம்பர் 6: அதிகாலையில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது

2017 பிப்ரவரி 5: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்.

2017 பிப்ரவரி 7: ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்து அதிமுகவில் தர்மயுத்தத்தை தொடங்கினார் ஓ. பன்னீர்செல்வம் இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர்.

2017 பிப்ரவரி 9: அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தால் சசிகலா முதல்வராக பதவி ஏற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

2017 பிப்ரவரி 14: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைந்ததால் அவருக்கு இத்தீர்ப்பு பொருந்தாது என அறிவிக்கப்பட்டது.

2017 பிப்ரவரி 14: அதிமுகவின் சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி கூவத்தூர் விடுதியில் சசிகலா முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டார்.

2017 பிப்ரவரி 15: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.

2017 பிப்ரவரி 15: பெங்களூரு சிறையில் சரணடைந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2017 பிப்ரவரி 18: தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு வென்றது.

2017 ஆகஸ்ட் 22: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாயை நீக்கக் கோரி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். பின்னர் புதுவை, கர்நாடகா சொகுசு விடுதிகளில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர்.

2017 ஆகஸ்ட் 23 : ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையான நிரூபிக்க உத்தரவிட கோரி மனு அளித்தார்.

2017 ஆகஸ்ட் 24: ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலிடம் அரசு கொறடா ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.

2017 ஆகஸ்ட் 25: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.

2017 ஆகஸ்ட் 28 : தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ களிடம் விளக்கம் கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினர்.

2017 செப்டம்பர் 12 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

2017 செப்டம்பர் 18 : தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

2017 அக்டோபர் 13: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

2018 ஏப்ரல் 27: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

2019 பிப்ரவரி 4: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது சபாநாயகர் இத்தனை ஆண்டுகாலம் தாமதம் செய்ததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

2019 பிப்ரவரி 14: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.

English summary
Here is the timeline of the DMK's plea on Disqualifing of OPS and 11 AIADMK MLas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X