சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் இனிய ஷாப்பிங் மக்களே.. ஜில்.. ஜங்.. ஜக்… நீங்க எப்படி பண்ணப் போறீங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி வந்தாச்சு.. அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுக்கப் போகின்றன. ஷாப்பிங் திருவிழாக்கள் களை கட்ட ஆரம்பித்து விட்டன.

டிவி, பேப்பர், வெப்சைட் என எந்தப் பக்கம் பார்த்தாலும் ஆஃபர் மழைதான். இதை வாங்கினா அது இலவசம்.. அதை வாங்கினா இது இலவசம்.. எதுவுமே வாங்காம சும்மா வந்துட்டு போனாலே இதெல்லாம் இலவசம்.. என எக்கச்சக்க இலவசங்களும், அதிரடித் தள்ளுபடிகளும் நம்மை கையை பிடித்து இழுக்காத குறையாக ஷாப்பிங்கிற்கு அழைக்கின்றன.

ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துவிட்டதால், நேரடியாக கடைக்கு வந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என கடைக்காரர்கள் ஒருபக்கம் குறைபட்டுக் கொள்கிறார்கள். மற்ற நாட்களில் எப்படியோ, ஆனால் விழாக் காலங்களில் ஜெகஜ்ஜோதியாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் கடைவீதியில் கடை கடையாக ஏறி இறங்கி ஷாப்பிங் செய்வதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் கிடைப்பதில்லை.

ஊரெல்லாம் ஷாப்பிங் ட்ரெண்டு களைகட்ட ஆரம்பித்துவிட்டது. நீங்க தீபாவளி ஷாப்பிங்கை முடித்துவிட்டீர்களா? இனிமேல்தான் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான். ஷாப்பிங்கிலும் ஜில்.. ஜங்.. ஜக்.. என மூன்று வகை இருக்கிறது. மனதிற்கு பிடித்ததை சரியான விலைக்கு பேரம் பேசி மகிழ்ச்சிகரமாகவும், உடம்பை அலட்டிக் கொள்ளாமலும் ஷாப்பிங்கை முடித்துவிட்டு ஜில்லென்று ஃபிரெஷ்ஷாக வீடு திரும்பினால் அது ஜில் ஷாப்பிங். தேவையான பொருளை ஓரளவுக்கு சரியான விலைக்கு, சரியான ஆஃபரில் வாங்கி வந்தால் அது ஜங் ஷாப்பிங். எதுக்கு வாங்கினோம்னே தெரியாம கண்டதையும் அள்ளிப் போட்டுக்கொண்டு, அதற்கும் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து நொந்து நூடுல்ஸாகி வீடு வந்தால் அது ஜக் ஷாப்பிங்.

உங்கள் ஷாப்பிங் அனுபவம் ஜில்லென்று அமைய வேண்டுமா? ஷாப்பிங்கில் அசத்த இந்த 6 டிப்ஸை முயற்சி செஞ்சு பாருங்க.

1 ஷாப்பிங் ஆர்வம் உள்ள நண்பரை உடன் அழைத்து செல்லுங்கள்

1 ஷாப்பிங் ஆர்வம் உள்ள நண்பரை உடன் அழைத்து செல்லுங்கள்

நண்பர்களோடு ஷாப்பிங் போவது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம்தான். அதிலும் குறிப்பாக நம்மைப் போலவே ஷாப்பிங் செய்வதற்கான தேவையும், ஆர்வமும் உள்ள ஆளை இழுத்துக் கொண்டு திரிந்தால், அலுப்பும் தெரியாது, தேவைப்படும் ஆலோசனையும் உடனுக்குடன் கிடைக்கும். அதேபோல 5 எடுத்தால் 2 இலவசம் போன்ற இடங்களில் நண்பருக்கும் சேர்த்து துணி வாங்கிவிட்டு, பில் தொகையையும் மிச்சம் பிடிக்க முடியும்.

2 வார நாட்களில் ஷாப்பிங் போங்க

2 வார நாட்களில் ஷாப்பிங் போங்க

விழா காலங்களில் வார இறுதி நாட்களில் ஷாப்பிங் போனீங்கன்னா, அத்திவரதரை பார்க்க பாஸ் இல்லாம காஞ்சிபுரம் போன கதையாயிடும். பொருளை எடுக்குறதுல இருந்து, பில் போடுற வரைக்கும் லைன்ல நின்னே நொந்து நூடுல்ஸ் ஆகிடுவீங்க. அதனால் லீவு போட்டுட்டாவது வார நாட்களில் ஷாப்பிங்கை முடிங்க. அதிலும் முடிஞ்சா காலையில கடை திறந்த உடனேயே உள்ளே நுழைஞ்சிடுங்க. அப்போதான் நிம்மதியா எல்லாத்தையும் எடுத்துப் பார்த்து தேவையானதை பொறுமையா தேர்வு செய்ய முடியும்.

 3 நல்லா சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் போங்க..

3 நல்லா சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் போங்க..

மணிக்கணக்கா ஷாப்பிங் பண்ணனும்னு ஆசை இருந்தா மட்டும் போதாது, உடம்புல தெம்பும் வேணும். இன்னைக்கு பரந்துவிரிந்த ஷாப்பிங் மால்களில் சும்மா ஒரு சுத்துசுத்திட்டு வந்தாலே காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சிடுது. மணிக்கணக்கா எல்லாத்தையும் எடுத்துப் பார்த்து, அதுக்கப்புறம் பில் போட லைன்ல நின்னுன்னு ஷாப்பிங்னா சாதாரண விஷயம் கிடையாது பாஸ். அதனால் நல்லா சாப்பிட்டுட்டு ஷாப்பிங் போங்க. Dehydrate ஆகாம இருக்கணும்னா, எப்பவும் கையில ஒரு தண்ணீர் பாட்டில் வெச்சிக்குங்க. மால்களில் இருக்கும் ஏசியே நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை காலி பண்ணிவிடும். ரங்கநாதன் தெரு போன்ற இடங்களில் நெரிசலில் புகுந்து புறப்பட்டு ஷாப்பிங் செய்வதாக இருந்தாலும் உடலில் தெம்பு இருந்தால்தான் மனதில் உற்சாகம் இருக்கும். ரோட்டோர ஷாப்பிங் என்றால் முடிந்தவரை சூரியனின் சூடு குறைவாக இருக்கும் நேரமாக பார்த்து கிளம்புங்கள்.

4. பணம் இருந்தா மட்டும் ஷாப்பிங் போங்க..

4. பணம் இருந்தா மட்டும் ஷாப்பிங் போங்க..

சம்பளம் அல்லது போனஸ் கைக்கு வரலை என்றால் ஷாப்பிங்கை தள்ளிப் போடுங்கள். கிரெடிட் கார்டை நம்பி ஷாப்பிங் போவோர் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தால், கவனம், கவனம், கவனம்.. அவ்வளவுதான் சொல்ல முடியும். கிரெடிட் கார்டாகவே இருந்தாலும் மொத்த ஷாப்பிங் பட்ஜெட்டை முடிவு செய்துவிட்டு காலை எடுத்து வெளியில் வையுங்கள். ஆப்புகள் எப்போதுமே ஆஃபர் வடிவில்தான் வரும் என்பதை உணர்வது நல்லது. EMI option இருக்கிற தைரியத்தில் கண்டதையும் வாங்கிக் குவித்தால், அப்புறம் கிரெடிட் கார்டுக்கு பணம் கட்ட பர்சனல் லோன் வாங்குற மாதிரி ஆயிடும், ஜாக்கிரதை.

5 எங்கே போறோம், எதுக்கு போறோம்னு தெரிஞ்சு போங்க

5 எங்கே போறோம், எதுக்கு போறோம்னு தெரிஞ்சு போங்க

என்ன வாங்கப் போறோம், எங்கே வாங்கப் போறோம் போன்ற கேள்விகளை கேட்டுவிட்டு ஷாப்பிங்கை தொடங்குங்கள். இலக்கு இன்றி ஆரம்பிக்கப்படும் ஷாப்பிங்குகள் பெரும்பாலும் ஜக் வகையிலேயே முடிந்துவிடும். யாருக்காவது பிறந்ததாள் அல்லது கல்யாண நாள் பரிசு வாங்கப் போகிறோம் என்றால் பட்ஜெட்டை முடிவு செய்துவிட்டு, அதற்கேற்ற இடத்திற்கு செல்லுங்கள். நாம் வாங்க விரும்பும் பொருள் எங்கு கிடைக்கும் என இணையத்தில் தேடிவிட்டு பிறகு நேரில் சென்றால் ஏமாற்றங்களையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

6 ஆஃபர்கள் அறிவது ஷாப்பிங்கிற்கு அழகு

6 ஆஃபர்கள் அறிவது ஷாப்பிங்கிற்கு அழகு


போட்டிகள் நிறைந்த இந்த வியாபார உலகில் எங்கிருந்து என்ன ஆஃபர் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாது. பேப்பரில் முழுப்பக்க விளம்பரம் பார்த்தால், அந்த குறிப்பிட்ட ஆஃபர் என்றுடன் முடிகிறது என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சில நேரங்களில் இந்த ஆஃபர் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே என்று இருக்கும். அதுபோன்ற நேரங்களில், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் பழமொழியை கடைபிடிப்பது நல்லது. அதேபோல நமது இமெயிலில் வந்து விழும் ஆஃபர் பற்றிய தகவல்களையும் நேரம் இருக்கும்போது படித்துவிடுங்கள். அதில் சிலது நமக்கு உண்மையிலேயே பயனுள்ளதாகவும் இருக்கலாம். அதனால் அதை அப்படியே ஜங்க் மெயிலுக்கு அனுப்புவது அத்தனை உசிதமல்ல.

7 உங்கள் ட்ரெஸ் ரொம்ப முக்கியம்

7 உங்கள் ட்ரெஸ் ரொம்ப முக்கியம்


ஷாப்பிங் போகும்போது என்ன உடை உடுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். பலரும் இந்த விஷயத்தை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் கடைக்காரர்கள் உங்களின் உடையை வைத்து உங்களை எடை போடுவார்கள். உங்களின் பணபலம், ரசனை போன்ற பல விஷயங்களை உங்கள் உடை, ஷூ, ஹேண்ட்பேக் போன்றவை அவர்களுக்கு சொல்லிவிடும். இந்த பார்ட்டி பெரிய பட்ஜெட்டில் வாங்க மாட்டார் என்று அவர்கள் முடிவு கட்டிவிட்டால், நீங்கள் வாயைத் திறந்து கேட்டாலொழிய விலை உயர்ந்த செக்ஷன் பக்கம் உங்களை அழைத்துப் போகவே மாட்டார்கள். மலிவான பொருட்களை மணிக்கணக்கில் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு வர வேண்டியதுதான். ஆள் பாதி ஆடை பாதி என்பது ஷாப்பிங் விஷயத்தில் நூற்றுக்கு நூறு

உண்மை.

இதை எல்லாம் முடிந்த வரை ஒழுங்காக கடைபிடித்தால் தேவையற்ற அலைச்சலையும், ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம். ஷாப்பிங் போவதும் ஒரு கலைதான். அதை ரசித்து செய்தால், நாளுக்கு நாள் உங்களின் ஷாப்பிங் திறமை மெருகேறும். உனக்கு மட்டும் எப்படித்தான் இதெல்லாம் மாட்டுதோ என்று நண்பர்கள் விழிவிரிய வியப்போடு கேட்கும் அளவிற்கு வித்தியாசமான பொருட்களை குறைந்த விலையில் வாங்கி அனைவரையும் அசத்த முடியும். இனிய ஷாப்பிங் அனுபவத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

- கௌதம்

English summary
People are started purchasing dresses and other materials for Diwali. Here are some tips for them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X