சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை... பிரசாதம் வழங்கி ஆசி..!

Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் கொடுக்கப்பட்டதுடன் மரியாதையும் அளிக்கப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் வந்த வேத பண்டிதர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தாங்கள் கொண்டு வந்திருந்த பிரசாதத்தை கொடுத்து ஆசிர்வாதம் செய்தனர்.

Tirupati Devasthanam Vedic scholars meeted Chief Minister MK Stalin

வேத முழக்கங்கள் எழுப்பி ஸ்டாலினை அவர்கள் வாழ்த்திய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இந்துகளுக்கு எதிரானவர் ஸ்டாலின் என தேர்தலுக்கு முன்பு பாஜக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் அனைவரது பாராட்டையும் கவனத்தையும் பெற்றிருக்கிறது. இதன்மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கு பொதுவான நபர் என்பதை ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.

Tirupati Devasthanam Vedic scholars meeted Chief Minister MK Stalin

இதனிடையே ஸ்டாலின் வசிக்கும் பகுதியான ஆழ்வார்பேட்டையை குறிப்பிட்டு ஆழ்வார்பேட்டையை தேடி வந்த திருப்பதி என திமுகவினர் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் முதல்வரானதற்கு துர்கா ஸ்டாலினின் உருக்கமான வேண்டுதலே காரணம்.. ஜெ. உதவியாளர் பதிவு! ஸ்டாலின் முதல்வரானதற்கு துர்கா ஸ்டாலினின் உருக்கமான வேண்டுதலே காரணம்.. ஜெ. உதவியாளர் பதிவு!

திமுகவை தொடர்ந்து இந்து விரோத கட்சி என ஒரு சிலர் விமர்சித்து வரும் நிலையில், இந்து கோயில்கள் புனரமைப்பு பணிக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வாக்குறுதி அளித்திருக்கிறார் ஸ்டாலின். விரைவில் இந்த திட்டத்தை தொடங்கி அதற்கான செயல்வடிவத்தை கொடுக்கத் தொடங்கிவிடுவார் எனத் தெரிகிறது.

அதேபோல் இந்து ஆன்மிக தலங்களான காசி, ராமேஸ்வரம், கேதர்நாத், உள்ளிட்ட கோயில்களுக்கு செல்ல ஆண்டுக்கு ஒருமுறை தலா ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்ற வாக்குறுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
Tirupati Devasthanam Vedic scholars meeted Chief Minister MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X