சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி.. உயிரை பணயம் வைத்து, குட்டிகளை ஒன்னொன்னா மீட்டு.. சிலிர்க்க வைத்த ஜீவன்

குட்டிகளை மீட்டெடுத்த தாய் எலியின் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு முறையும் தண்ணீருக்குள் மூழ்கி.. மூழ்கி.. தன் உயிரை பணயம் வைத்து.. எலி ஒன்று தன் குட்டிகளை மீட்க நடத்திய பாச போராட்டம், 2 நாட்களாக நம் மனசை ஈர்த்து வருகிறது.

Recommended Video

    தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி.. உயிரை பணயம் வைத்து, குட்டிகளை ஒன்னொன்னா மீட்டு.. சிலிர்க்க வைத்த ஜீவன்

    இந்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.. கடந்த சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.. அதுபோல திருப்பூரிலும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

     tiruppur rat rescue its children video goes viral on socials now

    திடீரென பெய்த மழையால் ரோடெல்லாம் தண்ணீர் வழிந்தோடியது.. அதனால் சாக்கடைகளும் நிரம்பி வழிந்தன.. இதனால், மழை நீரானது, அங்கிருக்கும் ஒரு எலி வளைக்குள் புகுந்து விட்டது.. இதனால், ஏற்கனவே அந்த வளைக்குள் தங்கியிருந்த எலி பீதியானது.. பிறந்து சில நாட்களேயான தன்னுடைய எலிக்குஞ்சுகள் தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடியது... இதை பார்த்ததும் துடித்து போய்விட்டது.

    பொங்கி வரும் நீரில் இருந்து அந்த குட்டிகளை காப்பாற்ற கடுமையாக போராடியது.. அந்த நீரின் வேகத்துக்கு தாய் எலியே அடித்து கொண்டு போய்விடும்.. ஆனாலும் தன் உயிரை பணயம் வைத்து, குட்டிகளை காப்பாற்ற துணிந்தது.. அப்படியே தண்ணிக்குள் மூழ்கி சென்று, வளைக்குள் இருந்த ஒவ்வொரு எலி குஞ்சுகளையும் எடுத்து வந்து பக்கத்தில் இருந்த பிளாட்பாரத்தில் வைத்து விட்டு போனது.

    தமிழர் தொன்மத்தின் சாட்சி கீழடியில் அருங்காட்சியம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்தமிழர் தொன்மத்தின் சாட்சி கீழடியில் அருங்காட்சியம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

    இப்படியே 5 எலி குஞ்சுகளை காப்பாற்றியது.. ஒவ்வொரு முறையும் நீரில் மூழ்கும்போது உயிரை பணயம் வைத்துதான் எலி சென்றது.. இந்த காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.. அதை பார்க்கும் எல்லாருக்குமே ஒருசித சிலிர்ப்பு வந்து போகிறது.. அம்மா எலியை பாராட்டி, பலரும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்!

    தாய் பாசத்துக்கு மிஞ்சின சக்தி இந்த உலகில் வேறு ஏது என்பதை மனித குலத்துக்கு, இந்த அற்ப ஜீவன்கள் அடிக்கடி நினைவு படுத்தி கொண்டே இருக்கின்றன.. அம்மான்னா உயிரையே தருவாங்கன்னு நாம கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால், இந்த அம்மா எலி அதை கண்ணெதிரே புரிய வைத்துவிட்டது. எத்தனை யுகம் போனால் என்ன... எந்த உயிரினமாக இருந்தாலும் என்ன.. அம்மா என்று வந்துவிட்டால் எல்லா பாகுபாடுகளுமே நொறுங்கிவிடுகிறது.

    English summary
    tiruppur rat rescue its children video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X