India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிக்கலில் திமுக "தலை".. அமித்ஷாவுக்கு இது தெரியுமா.. பாஜகவை சீண்டிய "புள்ளி".. ஹாட் அறிவாலயம்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவை சீண்டி மேலும் ஒரு திமுக அமைச்சர் பேசிய பேச்சு, சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.. இதனால், பாஜக தரப்பு டென்ஷனில் உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக என்ன செய்தாலும் அதை விமர்சிக்க அதிமுக காத்திருக்கிறதோ இல்லையோ, பாஜக எந்நேரமும் ரெடியாகவே உள்ளது.

5 நாட்கள்.. 5 சம்பவம்! சல்லி சல்லியாக நொறுக்கிட்டீங்களே! அடித்து சொன்ன அதிமுக.. விக்கித்து போன பாஜக! 5 நாட்கள்.. 5 சம்பவம்! சல்லி சல்லியாக நொறுக்கிட்டீங்களே! அடித்து சொன்ன அதிமுக.. விக்கித்து போன பாஜக!

கண்டனம், விமர்சனங்கள் மட்டுமல்லாமல், போராட்டம், முற்றுகை என அடுத்த லெவலுக்கும் தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறது தமிழக பாஜக.

கோட்டை

கோட்டை

இதற்கு நடுவில் திமுகவுக்குள்ளேயே சர்ச்சைகள் கிளம்பயபடியே உள்ளன.. கவுன்சிலர்களால் சர்ச்சை, மா.செ.க்களால் சர்ச்சை என ஆரம்பித்து திமுக சீனியர்களாலேயே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழல் வந்துள்ளது.. புகார்கள், ஏராளமாக வந்தபோதிலும், முதல்வர் ஸ்டாலின் யார் மீதும் நடவடிக்கையை எடுக்காமல், பொறுமையை கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.. திமுக அமைச்சர்கள் சில நாளைக்கு முன்பு, அமைச்சர் கேஎன் நேரு பேசியது கோட்டை வரை பறந்ததாக செய்திகள் பரபரத்தன..

நேரு

நேரு

அதாவது, திருச்சி திமுக ஓராண்டு சாதனை கூட்டத்தில் நேரு பேசியபோது, ''நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்பவும் நல்லவர்கள்.. இனி பொன்முடியின் அடிமை புகழேந்தி எம்எல்ஏ பேசுவார் என்றார்.. தங்களை அமைச்சர் நேரு, "அடிமைகள்" என்று பொதுமேடையில் சொன்னதை கேட்டு, திமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர்... திமுக மாவட்ட நிர்வாகிகளும் நேருவின் பேச்சை கேட்டு ஷாக் ஆகினர்.

 சிவப்பு விளக்கு

சிவப்பு விளக்கு

அதேபோல, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மாநிலங்களவை எம்பியாகயாக பதவி வகித்தவர்.. சீனியர் என்றாலும், அடிக்கடி ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்கி கொள்வார். ஏற்கெனவே பட்டியல் இனத்தவர் குறித்து பேசி வசமாக மாட்டிக் கொண்டதால், அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது... அதே போல, மீடியாக்களை "சிவப்பு விளக்கு" பகுதியுடன் தொடர்புபடுத்தி பேசினார்.. பிறகு, திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் பேசியபோது:

முண்டங்கள்

முண்டங்கள்

"திமுகவின் தேர்தல் அறிக்கையை டிஆர் பாலு தான் தயார் செய்தார். தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாமல் ஏதாவது விட்டுப் போய் இருந்தால், அதை அவரிடம் தான் போய் கேட்க வேண்டும்.. இது தெரியாமல் சில முண்டங்கள் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். இப்போது, இன்னொரு சீனியர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்..

 இளங்கோவன்

இளங்கோவன்

இந்தி மொழியானது சூத்திரர்களுக்கு மட்டுமே என்று திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் பேசி புதிய சர்ச்சை கிளப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் திமுக எம்பியான டி.கே.எஸ்.இளங்கோவன் மேலும் பேசியதாவது: "இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களில் தாய்மொழியாக மட்டுமே உள்ளது.. நான் சொல்லும் பட்டியலை கேளுங்கள். மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எல்லாம் வளர்ந்த மாநிலங்கள்.

 சமஸ்கிருதம்

சமஸ்கிருதம்

இந்த மாநிலங்களில் இந்தி தாய்மொழியாக இல்லை... வளராத மாநிலங்கள் என்றால் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான். இந்த வளர்ச்சியடையாத மாநிலங்களில் மட்டுமே இந்தி மொழி என்பது தாய்மொழியாக உள்ளது. அப்படியெனில் எதற்காக நான் இந்தி படிக்க வேண்டும். நாடு முன்னேற வேண்டும் என்றால் மாநில மொழிகளை பாதுகாக்க வேண்டும். இந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும்" என்றார்.

 அமித்ஷா பேச்சு

அமித்ஷா பேச்சு

கடந்த ஏப்ரலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியானது ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு இல்லை என்று கூறியிருந்தார்.. இதற்கு அப்போதே தென் இந்தியாவில் அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் பல எதிர்ப்புகள், கண்டனங்கள் இருந்து வெடித்தன.. இப்போது டிகேஎஸ் இளங்கோவன் வெளிப்படையாகவே எதிராக பேசி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

 பானிபூரி

பானிபூரி

இப்படித்தான், சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில், இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள்... ஆனால் தமிழகத்தில் இந்தி படித்தவர்கள்தான் பானிபூரி விற்கிறார்கள்... யாரும் யார் மீதும் மொழியை திணிக்க கூடாது என்று கூறியிருந்ததும், பரபரப்பை கிளப்பியது.. இப்படி தொடர்ந்து திமுக அமைச்சர்கள் எதையாவது பேசி சிக்கலில் சிக்கி கொள்வது ஸ்டாலின் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. டிஆர் பாலுவை சிக்க வைப்பது போல பேசி பேட்டி தந்தாலும், அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றபோதிலும், பாஜகவும் அதுபோலவே எடுத்து கொள்ளுமா? என்பது சந்தேகம் என்கிறார்கள்.

English summary
tks elangovan says about hindi language and criticized bjps undeveloped states டிகேஎஸ் இளங்கோவன் இந்தி மொழி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X