சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்ரா.. வாசனிடமிருந்து சைக்கிளைப் பறித்துக் கொண்டு.. ஆட்டோவை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்ஸா சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் சுயேட்சைகள் மற்றும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி இன்று நடந்தது.

TMC get auto ricksha symabol in lok sabha election

அதிமுக கூட்டணி சார்பில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். முதலில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால் குறைந்த பட்சம் அந்த கட்சி இரண்டு தொகுதியிலாவது போட்டியிட்டால் தான் சைக்கிள் சின்னத்தை ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் ஒரு தொகுதியில் மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால், அக்கட்சிக்கு சுயேட்சை சின்னமாக ஆட்டோ ரிக்ஸாவை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

"திமுக, அண்ணா திமுகவுக்கு ஓட்டுப் போடாதீங்க"... அடடா.. பழக்க தோஷத்துல தப்பாக பேசிய ராமதாஸ்!

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு கம்பீரமாக தமிழகம் முழுவதும் வலிமையாக வலம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், இன்று அந்த சின்னத்தை இழந்து விட்டனர். இனி அவர்கள் தஞ்சை முழுவதும் ஆட்டோவில் செல்ல உள்ளார்கள். ஏனெனில் சுயேட்சை சின்னமான அதனை உடனே விளம்பரப்படுத்தியாக வேண்டும்.

English summary
TMC get auto ricksha symabol in lok sabha election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X