சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விருப்ப மனு... தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் மாத கடை கடைசியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர்.

TMC invites applications from Feb 25 for assembly elections

மேலும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து முக்கிய கட்சிகள் விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், நடைபெறவிருக்கும் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு- சட்டசபையில் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும்... முதல்வர் நாராயணசாமிநம்பிக்கை வாக்கெடுப்பு- சட்டசபையில் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும்... முதல்வர் நாராயணசாமி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 ல் தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் த.மா.கா சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவைப் பிப்ரவரி 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை, ஆழ்வார்பேட்டை, த.மா.கா தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

பொதுத்தொகுதிகளுக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ. 5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ. 2,500 செலுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
GK Vasan announcement on applications assembly elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X