சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஹைதர் அலி நீக்கம்? மீண்டும் உடைகிறது தமுமுக?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இருந்து பொதுச்செயலர் ஹைதர் அலி நீக்கப்படலாம் என்பதால் அந்த இயக்கம் மீண்டும் ஒரு பிளவை எதிர்கொள்ள இருக்கிறது.

முஸ்லிம்களுக்கான இயக்கமாக உருவானது தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம். பின்னர் மனித நேய மக்கள் கட்சி என அரசியல் கட்சியானது.

TMMK faces one More Split?

இந்த இயக்கத்தில் இருந்து பார்க்கர் உள்ளிட்டோர் வெளியேறி தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தை உருவாக்கினர். மனித நேய மக்கள் கட்சி, தமமுகவில் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலர் ஹைதர் அலி ஆகியோர் முக்கிய தலைவர்களாக இருந்தனர்.

சென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது.. நிதி ஆயோக்கில் பகீர் சென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது.. நிதி ஆயோக்கில் பகீர்

அப்போது தமிமுன் அன்சாரி தலைமையில் அக்கட்சி ஒரு பிளவை எதிர்கொண்டது. அவர் மஜகவை உருவாக்கி எம்.எல்.ஏ.வாகிவிட்டார்.

அண்மையில் லோக்சபா தேர்தலுக்கு முன்னரே ஜவாஹிருல்லா, ஹைதர் அலி குழுக்களிடையே மோதல் வெடித்தது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகவும் இருந்தது.

பின்னர் தேர்தலை முன்வைத்து இருதரப்பும் சமாதானம் ஆனது. இந்த நிலையில் தமுமுகவின் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் வரும் 29-ந் தேதி பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பொதுக்குழுவுக்கு முன்னதாக ஹைதர் அலியை நீக்குவது எனவும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இதனால் தமுமுக மீண்டும் ஒரு பிளவை எதிர்கொள்ளக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

English summary
Tamilnadu Muslim Munnetra Kazhagam to face one More Spiliti, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X