சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாஷ்.. 2404 பேர் பாஸ்.. பிளஸ் 2 தேர்வில் அசத்திய ''மாற்று'' திறனாளிகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

இன்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 8.87 லட்சம் பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது .

TN 12th result 2019: 2404 out of 2697 Differently abled have passed in the exam

தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து மொத்தம் 2697 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

விழிமாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் இந்த தேர்வை எழுதினார்கள். இதில் கணிசமான மாணவர்கள் தற்போது தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அதன்படி மொத்தம் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

பல பேர் வாழ்க்கையில் பெரிய விஷயங்களை முயற்சி செய்வதற்கும், வெற்றிபெறுவதற்கும் நிறைய காரணங்களை சொல்லும் போது, மாற்று திறனாளிகள் எல்லோரும் அசால்ட்டாக தேர்வெழுதி அதில் அதிக மதிப்பெண்ணும் எடுத்து சாதித்து இருக்கிறார்கள். இவர்களின் சாதனைக்கு ஒரு சல்யூட்!

English summary
TN 12th result 2019: 2404 out of 2697 Differently abled have passed in the +2 exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X