சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த 20 டோல்கேட் பக்கம் போனா... இனி எக்ஸ்ட்ரா காசு எடுத்துட்டு போங்க.

Google Oneindia Tamil News

சென்னை; தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பாதி சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கிறது.

TN: 20 Tollgates charges will increase by 10 percent from 1st April

இதன்படி தமிழத்தில் 5004 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியார் நிறுவனங்கள், தமிழகத்தில் மொத்தம் உள்ள 43 சுங்கச்சாவடிகளில், 20 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளன.

பண பலம் இருந்தால்தான் இன்று தேர்தல்களில் ஜெயிக்க முடியுமா? பண பலம் இருந்தால்தான் இன்று தேர்தல்களில் ஜெயிக்க முடியுமா?

செங்கல்பட்டு அருகே பரனூர், ஸ்ரீபெரும்புதூர், ஆத்தூர், சூரப்பட்டு, பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வகைகுளம், மதுரை, திருச்சி, வேலூர், கோயம்புத்தூர் (2), தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை உள்பட 20 சுங்கச்சவாடிகளில் 5 முதல் 15 ரூபாய் வரை ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

ஏற்கனவே பேருந்து டிக்கெட் கட்டண உயர்வு, டீசல் கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள், இனி ஒவ்வொரு பயணத்துக்கும் 10 சதவீதம் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டியதிருக்கும். உதாரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு 800 ரூபாய் சுங்க கட்டணம் கொடுத்தால் இனி 880 ரூபாய் அளவுக்கு கொடுக்க வேண்டியது வரும். இது லாரி, பேருந்து என பெரு வாகனங்களும் பொருந்தும். இதனால் பேருந்து, லாரி, வாடகை கார் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது.

English summary
TN: 20 Tollgates charges will increase by 10 percent from 1st April
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X