சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர அனைவருக்கும் கல்லூரி பருவத்தேர்வுகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில் தமிழ்நாடு பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது என்றாலும் மூன்றாம் ஆண்டு படிக்கும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும், முதுநிலை படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும், பொறியியல் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும் தங்களின் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பின் மூலம் முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கும், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு படிப்பிற்கும் செல்லலாம். மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டும். பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகள் படிப்பவர்கள் ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு எழுத தேவையில்லை. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கடைசி செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN all state university exams cancelled except those of final year and last semester

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. லாக்டவுன் நீடித்துக்கொண்டே செல்வதால் பள்ளிகளை மீண்டும் தற்போது திறக்க முடியாத சூழல் நிலவி வருவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் பள்ளிகளில் நடைபெறவிருந்த இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முதலில் ரத்து செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்து அறிவித்துள்ளன. இருப்பினும், கல்லூரிகளை பொறுத்தவரையில் பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளை கல்லூரிகள் திறந்த பின்னர் நடத்த திட்டமிடப்பட்டது.

கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறைஅமைச்சர் அன்பழகன், தமிழகத்தில் வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களாக பல்வேறு கல்லூரிகள் மாற்றப்பட்டுள்ளன. அதே சமயத்தில் தனிமைப்படுத்தும் வார்டுகளாகவும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கல்லூரி தேர்வுகளை நடத்துவது என்பது அரிதான காரியம். அதே சமயத்தில் தேர்வை ரத்து செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. முதல்வருடன் ஆலோசித்த பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது.

கொடுமை.. பீடித்த வறுமை.. தனக்குதானே கொடுமை.. பீடித்த வறுமை.. தனக்குதானே "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர் போட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய இளைஞன்

மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிட்டுள்ளேன்.

முதல்வரின் அறிவிப்பு பல நாட்களாக தவித்துக்கொண்டிருந்த மாணவர்களின் தவிப்பை போக்கி மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு பின்னர் வெளியாகும்.

English summary
Tamil Nadu colleges and University cancel the exam TamilNadu government give big relief to student
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X