சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாப் கியர் போட்ட அதிமுக.. டக்கர் பிளான் ரெடி.. அதிரடி உத்திகள்.. சட்டசபை தேர்தலுக்கு சூப்பர் ரெடி!

Google Oneindia Tamil News

சென்னை: கட்சிகள் எல்லாம் கொரோனாவை தூக்கி குப்பையில் போட்டு விட்டு தேர்தல் ஜுரத்துக்குள் மூழ்கி விட்டன. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமாக தேர்தலுக்குத் தயாராக ஆரம்பித்து விட்டன. ஆளும் அதிமுகவும் தன் ஸ்டைலில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளதாம்.

ஒருபக்கம் திமுக ரகசியமாக கூட்டணி குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மறுபக்கம் அதிமுகவும் தன் பங்குக்கு தனது கூட்டணியை பலப்படுத்துவதிலும், இன்ன பிற ஏற்பாடுகளிலும் மும்முரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவைப் பொறுத்தவரை பெரிய போட்டி, சவால் என்றால் அது அதிமுக மட்டும்தான். அதேபோலத்தான் அதிமுகவுக்கும் திமுகதான் மிகப் பெரிய சவால். எனவே இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி போட்டு தாக்குவது என்ற உத்திகள் குறித்துதான் அதிக கவலையில் உள்ளனர். அதை மனதில் வைத்துத்தான் ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து கொண்டுள்ளனர்.

தாமரை மலர்ந்துடுமோ.. இப்படி பண்ணுங்க.. பாஜக போடும் கிடுக்கிப்பிடி.. சிக்காமல் தப்பிக்க திணறும் திமுகதாமரை மலர்ந்துடுமோ.. இப்படி பண்ணுங்க.. பாஜக போடும் கிடுக்கிப்பிடி.. சிக்காமல் தப்பிக்க திணறும் திமுக

 அதிமுக

அதிமுக

திமுக தனித்தே போட்டியிடலாமா என்ற யோசனையில் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அது சரிப்படாது என்று எடுத்துக் கூறியதால் அதிகஇடங்களில் போட்டியிடுவது மிச்ச இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு தருவது என்ற அளவுக்கு இறங்கி வந்துள்ளது. அதிமுகவும் கூட கிட்டத்தட்ட இதே திட்டத்தில்தான் உள்ளது. இரு கட்சிகளிலும் உள்ள சில கட்சிகள் இரு தரப்பிலும் அலை பாய்ந்தபடி உள்ளதாகவும் ஒரு உள்ளார்ந்த தகவல் சொல்லிச் செல்கிறது.

 அரியர் மாணவர்கள்

அரியர் மாணவர்கள்

அடுத்து இளைஞர்கள் மற்றும் வாக்குரிமை கொண்ட மாணவர்களின் வாக்குகளையும் அப்படியே கவரும் வகையில் பல்வேறு திட்டமிடல்களை அதிமுக தரப்பு யோசித்து வருகிறதாம். பொறியியல் கல்லூரி அரியர் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்ய முடியாமல் போய் விட்டாலும் கூட இப்போது கலை அறிவயில் கல்லூரிகளில் அதைச் செய்யலாம் என்ற திட்டம் உள்ளதாம். இது மாணவர் சமுதாயத்தை தங்கள் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கையில் அதிமுக உள்ளதாம்.

 திமுக

திமுக

இளம் பெண்கள், இளைஞர்கள் பாசறை மூலமாக இளம் வாக்காளர்களின் வாக்குகளைக் கவரும் திட்டத்தையும் அதிமுக கையில் எடுக்கவுள்ளதாம். ஜெயலலிதா காலத்தில் இலவச லேப்டாப் திட்டம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தற்போதும் அதே பாணியில் அதிரடித் திட்டமாக எதைச் செய்யலாம் என்ற யோசனையில் அதிமுக உள்ளதாம். திமுக தரப்பில் கண்டிப்பாக இலவச மொபைல் போன் தரும் திட்டம் கையில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுவதால் அதை மிஞ்சும் வகையிலான திட்டத்தை அதிமுக தரப்பு யோசித்து வருகிறதாம்.

 கருணாநிதி, ஜெயலலிதா

கருணாநிதி, ஜெயலலிதா

வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் அனைத்துக் கட்சிகளும் பண பலத்தை களமிறக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் நடைபெற போகும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் நிச்சயம் வாக்காளர்களைக் கவருவது இரு கட்சிகளுக்கும் மிகப் பெரிய சவால்தான். பழைய மாதிரியே போய் வாக்காளர்களை அணுக முடியாது. நம் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அவர்களை அணுகியாக வேண்டும் என்ற அச்ச உணர்வு இரு தரப்பு கட்சித் தலைவர்களிடமும் உள்ளதை மறுக்க முடியாதுதான்.

ஆக மொத்தம் அதிமுக மட்டுமல்லாமல் திமுகவும் கூட தேர்தலுக்குத் தயாராகி விட்டது. இவர்கள் எடுக்கப் போகும் முடிவுகளைப் பொறுத்த பிற கட்சிகளின் தேர்தல் நடமாட்டும் சூடு பிடிக்கும் என்று நம்பலாம்.

English summary
TN Assembly Election 2021: AIADMKs new strategy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X