சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 6 தொகுதிகள்? எச். ராஜா, கே.டி ராகவன், குஷ்பு, வினோஜ் செல்வம் போட்டி?அதிமுக தருமா?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் சென்னையில் மட்டும் 6 தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சென்னையில் போட்டியிட்டாக வேண்டும் என விரும்புவதால் அதிமுகவுக்கு நெருக்கடி தரப்படுகிறதாம்.

அதிமுக கூட்டணியில் முதலில் பாஜக 60 தொகுதிகளை கேட்டு பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அதிமுக இதனை நிராகரித்துவிட்டது.

பாமகவுக்கு அதிக இடங்கள்

பாமகவுக்கு அதிக இடங்கள்

பாஜகவுக்கு வேறு கூட்டணி வாய்ப்பு இல்லை என்பதால் அதிமுகவுடன் இணங்கிப் போவது என்கிற நிலைக்கு வந்தது. இதனால் 40 தொகுதிகள் வரை எதிர்பார்த்தது பாஜக. அதிமுகவோ இதனையும் ஏற்கவில்லை. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 20 முதல் 25; அதற்கு அடுத்துதான் பாஜக, தேமுதிக, தமாகா என்கிற நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்திருக்கிறது.

பல்க் தொகுதிகள்

பல்க் தொகுதிகள்

இதனால் மிக கவனமாக பாஜக மூத்த நிர்வாகிகள் போட்டியிட விரும்புகிற தொகுதிகளை மட்டும் டார்கெட் செய்ய தொடங்கியது பாஜக. இதன்படி சென்னையிலேயே 6 தொகுதிகளை பாஜக கேட்கிறது. இதேபோல் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் கணிசமான தொகுதிகளை கேட்டு பாஜக அடம்பிடிக்கிறதாம். சில மாவட்டங்கள்தான்.. ஆனால் அதிக தொகுதிகள் என்கிற பாஜகவின் பார்முலாவை அதிமுகவால் ஏற்க முடியவில்லையாம்.

சென்னையில் 6 தொகுதி கேட்கும் பாஜக

சென்னையில் 6 தொகுதி கேட்கும் பாஜக

அதுவும் சென்னையிலேயே 6 தொகுதிகளை எல்லாம் பாஜக கேட்பது ரொம்ப அதிகமானது என்கிறது அதிமுக தரப்பு. ஆனால் பாஜகவின் மூத்த தலைவர்களான எச். ராஜா, கே.டி. ராகவன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் சென்னையில் போட்டியிட்டாக வேண்டும்; எப்படியும் தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்தந்த தொகுதிகளை சுற்றி சுற்றி வருகின்றனர்.

அப்செட் அதிமுக

அப்செட் அதிமுக

பாஜகவினரின் இந்த கெடுபிடி நிர்பந்தத்தை அதிமுக தரப்பு ரசிக்கவில்லை. தொகுதிகளை அவர்களாகவே எடுத்துக் கொண்டு அங்கே போய் முகாமிட்டுக் கொண்டு இந்த தொகுதியில்தான் போட்டியிடுவோம் என பாஜக அடம்பிடிப்பது எப்படி சரியானது? என்பது அதிமுக தரப்பின் கேள்வி. ஆனால் பாஜகவோ எப்படியும் நாம் சொல்வதையே அதிமுக கேட்கும்..அதனால் டார்கெட் செய்த தொகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவோம் என்கிற கோதாவில் இறங்கிவிட்டதாம்.

English summary
BJP has demanded 6 Seats in Chennai from AIADMK Alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X