சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மு.க. ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு- ராகுல் காந்தியின் தமிழக பிரசார பயணம் குறித்து ஆலோசனை!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக பிரசார பயணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷா பங்கேற்றார்.

சமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..! சமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..!

அமித்ஷாவுடன் ஆலோசனை

அமித்ஷாவுடன் ஆலோசனை

இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி தொடரும் என அறிவித்தார். துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்றார். இதனைத் தொடர்ந்து அமித்ஷாவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பாஜகவின் 60 சீட் டிமாண்ட்

பாஜகவின் 60 சீட் டிமாண்ட்

இந்த ஆலோசனையில் பாஜகவுக்கு 60 தொகுதிகள் வேண்டும் என்றும் அது தொடர்பான பட்டியல் ஒன்றையும் அமித்ஷா கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜக கேட்கும் அத்தனை தொகுதிகளையும் அதிமுக தருமா? அல்லது 20 முதல் 30 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குமா? என்பது பேசுபொருளாக இருந்து வருகிறது.

ஸ்டாலின் -தினேஷ் குண்டுராவ் சந்திப்பு

ஸ்டாலின் -தினேஷ் குண்டுராவ் சந்திப்பு

இந்த நிலையில் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

ராகுல் காந்தி பிரசாரம்

ராகுல் காந்தி பிரசாரம்

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தியை அழைத்திருக்கிறோம். இந்த பிரசார பயணதிட்டம் தொடர்பாகவும் ஸ்டாலினுடன் ஆலோசித்தோம். ராகுல் காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை பேரணியில் ஸ்டாலினும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். தமிழக அரசியல் கள நிலவரம் குறித்தும் விவாதித்தோம் என்றார்.

தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை

தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை

மேலும் இன்றைய சந்திப்பில் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலினுடன் பேசவில்லை. ராகுல் காந்தியின் பயணம் தொடர்பாக மட்டுமே விவாதித்தோம் என்றார்.

English summary
Ahead of Tamilnadu Assembly Election, AICC in-charge for Tamil Nadu Dinesh Gundu Rao today will meet DMK President MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X