Just In
தமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் 30-ந் தேதி நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.

சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தை…. ஸ்டார்ட் பண்ணுங்க: அதிமுகவுக்கு நெருக்கடி தரும் அண்ணியார்
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என்பது தேமுதிகவின் நிலைப்பாடு. ஆனால் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

அத்துடன் சசிகலாவுக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிவருகிறார். அதேபோல் 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதும் தேமுதிகவின் கோரிக்கை.
நெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்?.. காரணம் இருக்கு!
இதனால் தேமுதிகவை அதிமுக கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பாக வரும் 30-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தேமுதிகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.