சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்களை ஜெயில்ல அடைச்ச பாஜகவை ஒருபோதும் ஆதரிச்சுடாதீங்க... சசிகலாவிடம் சொன்ன ஹைதர் அலி

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கனவை சிதைத்து சிறையில் அடைத்த பாரதிய ஜனதா கட்சியை ஒருபோதும் ஆதரிக்க கூடாது என சசிகலாவிடம் தமுமுக தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கும் ஹைதர் அலி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சட்டசபை தேர்தலில் அமமுக தனித்து களம் கண்டால் அதிமுக கூட்டணிக்கு சிக்கல் வரும் என்பதை உணர்ந்திருக்கிறது பாஜக. இதனால் பரம வைரியாக இருந்த சசிகலாவுக்காக அதிமுகவிடம் பரிந்துரை செய்து கொண்டிருக்கிறது பாஜக.

ஹோட்டல் ரூமில்.. இளம் பெண்ணுடன் கட்டி புரண்ட பாஜக அமைச்சர்.. வெட்கமாக இல்லை.. சீறி பாய்ந்த காங்! ஹோட்டல் ரூமில்.. இளம் பெண்ணுடன் கட்டி புரண்ட பாஜக அமைச்சர்.. வெட்கமாக இல்லை.. சீறி பாய்ந்த காங்!

அதிமுக மறுப்பு

அதிமுக மறுப்பு

ஆனால் அதிமுகவோ இதுவரை ஓகே.. சசிகலா- தினகரன் எனில் ஏற்கவே மாட்டோம் என எதிர் திசையில் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் பாஜக படு பரிதாபத்தில் இருந்து வருகிறது.

சசிகலாவுடன் ஹைதர் அலி

சசிகலாவுடன் ஹைதர் அலி

இந்த நிலையில் சசிகலாவை ஹைதர் அலி சந்தித்து பேசினார். மமகவின் கட்டுப்பாட்டின் உள்ள தமுமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஹைதர் அலி நீக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.

திமுகவில் 2 இடம்- எதிர்ப்பு

திமுகவில் 2 இடம்- எதிர்ப்பு

திமுக கூட்டணியில் மமக 2 இடங்களைப் பெற்றுள்ளது. இந்த 2 இடங்களை வாங்கியதற்கு பேசாமல் தேர்தலையே புறக்கணித்திருக்கலாம் என ஹைதர் அலி ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றன்னர். அத்துடன் மமகவின் ஜவாஹிருல்லாவுக்கு பதில் தரும் நடவடிக்கையையும் ஹைதர் அலி தொடங்கி இருக்கிறார்.

பாஜகவை ஆதரிக்காதீங்க

பாஜகவை ஆதரிக்காதீங்க

இதனால் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார் ஹைதர் அலி. இந்த சந்திப்பின் போது, லேடியா? மோடியா? என பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர் ஜெயலலிதா. அதற்கு முன்னர் தமுமுக மாநாட்டில்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என ஜெயலலிதா பேசியிருந்தார். உங்கள் முதல்வர் கனவை சிதைத்ததும் பாஜகதான். உங்களை சிறைக்கு அனுப்பியதும் பாஜகதான். எப்போதும் நம்புதற்குரிய கட்சி பாஜக அல்ல.. ஆகையால் பாஜகவை மட்டும் ஆதரித்துவிடாதீர்கள் என கோரிக்கை வைத்தாராம் ஹைதர் அலி.

English summary
TMMK Ex General Secretary Hyder Ali meets Sasikala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X