சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்".. தெறிக்க விட்ட சீமான்!

வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எந்த காலத்திலும், யாருடனும் நாங்கள் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம்... வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்" என்று சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

விரைவில் தேர்தல் வரப்போகிறது.. அதற்கான வேலைகளில் எல்லா கட்சிகளுமே இறங்கிவிட்டன.. யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது? அல்லது தனித்து போட்டியிடுவதா? அல்லது யாருக்கு எத்தனை சீட் என்பன உட்பட விறுவிறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் சத்தமே இல்லாமல் இருந்தது.. கமல் தலைமையில் 3வது அணி உருவாக வாய்ப்பு என்று சொல்லப்பட்டபோதுகூட, அந்த லிஸ்ட்டில் நாம் தமிழர் கட்சி இல்லை. அதனால் இந்த கட்சி தேர்தலில் இந்த முறையாவது போட்டியிட போகிறதா என்ற டவுட் இருந்து கொண்டே இருந்தது.

சசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி சசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி

தமிழ்

தமிழ்

இதை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே அறிவித்துவிட்டார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழவேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழவேண்டும் என நினைக்கிறார்கள்... அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் எப்பொழுதும் போல தனித்து தான் நான் போட்டியிட உள்ளேன்.

 தமிழின் பெருமை

தமிழின் பெருமை

தமிழ் குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேசியவர்கள் அதற்கு எதிரான காட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தான் தமிழின் பெருமையை குறித்து தற்பொழுது பேச முடியாமல் இருக்கிறார்கள்.. நாம் தமிழர் கட்சியிலும் தொகுதி வேட்பாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.. எப்பொழுதும் போல நாம் தமிழர் கட்சி பாஜக, அதிமுக, காங்கிரஸ், அதிமுக என எந்த கட்சியுடனும் நிச்சயமாக சேராது... தனித்தே நிற்கும்" என்றார்.

 அதிமுக, திமுக

அதிமுக, திமுக

அதிமுக, திமுக திராவிட கட்சிகளாகட்டும், காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளாகட்டும், கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வரும் நிலையில், சீமான் மட்டும் தனியாகவே தேர்தல்களை சந்தித்து வருகிறார். இந்த முறையும், தனித்து போட்டியிடுவதுதான் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பமாகவும் இருக்கிறதாம்.

சலிப்பு

சலிப்பு

எனினும், "ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிடுகிறோம்.. தொடர்ச்சியாக தோல்வி அடைந்தால், தொண்டர்கள் ஒருவித சலிப்பை சந்திப்பார்கள்.. அதனால் இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது" என்று சீமானுக்கு ஆலோசனைகளை சொன்னார்கள். ஆனால் சீமான், தன் நிலைப்பாட்டில் அப்போதிருந்தே உறுதியாக இருந்தாராம்.. அதன்படியே தற்போது தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார். இதையடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

எப்படியும் சீமான் தேர்தலில் இறங்குகிறார் என்றாலே தொகுதிகளில் பிரச்சாரம் களை கட்டும்.. சோயில் மீடியாவும் பரபரப்பாக இருக்கும்.. அந்த வகையில், வரப்போகிற தேர்தலிலும் நாம் தமிழர் பட்டைய கிளப்ப போகிறது என்பதில் சந்தேகமில்லை... ஆனால், இந்த முறை கட்சிக்குள் சில சலசலப்புகள், அதிருப்திகள், விலகல்கள் நடந்துள்ளன.. இவைகளுக்கு நடுவில் நாம் தமிழர் கட்சி எப்படி தேர்தலை எதிர்கொள்ள போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்புதான்.

English summary
TN Assembly election: Naam Tamilar katchi will contest alone, announces Seeman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X