பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை- தஞ்சையில் தேர்தல் பிரசாரம்
சென்னை: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக மீண்டும் தமிழகம் வருகை தருகிறார். தஞ்சையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி.
தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் டெல்லி தலைவர்கள் இடைவிடாமல் தமிழகம் வந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஏற்கனவே தேர்தல் பிரசாரம் செய்துள்ளனர். கன்னியாகுமரியில் அமித்ஷா நேற்று வீடு வீடாக பிரசாரம் செய்தார்.
நாளை மறுநாள் தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்பதாக இருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சாவூரில் விரைவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி பங்கேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.