• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"டவுட்".. வாக்கு எண்ணும் மையங்களில்.. மர்ம வாகனங்கள்.. நடுராத்திரி வந்த கன்டெயினர்.. என்ன நடக்குது!

|

சென்னை: தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. வாக்கு எண்ணிக்கைக்காக மக்கள் காத்துள்ளனர்.. இதற்கு ஒரு மாத கால இடைவெளி உள்ளதால், எதற்காக இவ்வளவு தாமதம்? உடனடியாக வாக்குகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  EVM இருக்கும் அறை அருகே நுழைந்த லாரி.. லயோலா கல்லூரியில் ஏற்பட்ட பரபரப்பு

  இதற்கு மற்றொரு காரணம், ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடந்து வருகின்றன.

  இபபோதைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. இதற்கு பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும், போலீசாரும், கட்சிக்காரர்களும் கண்கொத்தி பாம்பாக வாக்குப்பதிவு மிஷின்களை பாதுகாத்து வருகின்றனர்... இருந்தாலும் சில பிரச்சனைகள் வெடித்து வருகிறது.

  கொடைக்கானலில் பிரமாண்ட ஹோட்டலில் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலின் முகாம்!அடுத்த வியூகம் குறித்து ஆலோசனை!கொடைக்கானலில் பிரமாண்ட ஹோட்டலில் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலின் முகாம்!அடுத்த வியூகம் குறித்து ஆலோசனை!

   சிசிடிவி கேமரா

  சிசிடிவி கேமரா

  சில இடங்களில் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்கிறார்கள்.. சில சமயம், கரண்ட் கட் ஆகிவிடுகிறதாம்.. இதை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி வேட்பாளருமான வேல்முருனே செய்தியாளர்கள் முன்னிலையில் குற்றம்சாட்டி இருந்தார்.

   கன்டெயினர்

  கன்டெயினர்

  இதில் மிக முக்கியமான சம்பவம் கோவை வாக்கு எண்ணும் மையத்துக்கு கண்டெய்னர் லாரி ஏன் வந்தது என்பதுதான்.. அது ஒரு காலேஜ்.. அங்குதான் வாக்கு மையம் உள்ளது.. நடுராத்திரி இந்த லாரி வந்துள்ளது.. அதுவும், வாக்கு எண்ணும் மையத்தை குறி வைத்து ஏன் வந்தது? என்ற கேள்விகள் வலுத்து வருகிறது.. இதைதான் திமுகவும் கேள்வி கேட்டுள்ளது.. ஆர்எஸ் பாரதியும் இது சம்பந்தமாக புகார் ஒன்றினை இன்று தந்துள்ளார்..

  பாத்ரூம்கள்

  பாத்ரூம்கள்

  வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் சென்றது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியபிரத சாகுவை சந்தித்து திமுக நிர்வாகிகள் இந்த புகார் மனுவை அளித்துள்ளனர். இந்த வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அளவு பாத்ரூம்கள் உள்ளன.. அப்படி இருக்கும்போது, லாரிகளில் மொபைல் கழிப்பறைக்கு அவசியம் என்ன என்ற கேள்வியையும் திமுக தரப்பு எழுப்புகிறது. அந்த கண்டெய்னரை திறந்து பார்த்து சோதனையிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது..

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம்

  இதனிடையே மற்றொரு புகாரும் கிளம்பி உள்ளது.. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடணை, பரமக்குடி, முதுகளத்தூர், ராமநாதபுரம் என 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை இந்த கல்லூரி பேராசிரியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் லேப்டாப்புடன், ஆன்லைன் கிளாஸ் நடத்துவதற்காக வந்துள்ளோம் என்று சொல்லி உள்ளனர்.. அவர்களின் அடையாள அட்டையை பார்த்ததும் போலீசாரும் உள்ளே அனுமதித்துள்ளனர்.

   ஓட்டு மிஷின்

  ஓட்டு மிஷின்

  இதுவும் திமுகவுக்கு தரப்புக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. "ஏங்க.. ஓட்டு மிஷின் இத்தனை இருக்கும்போது, இவங்களை எப்படி உள்ளே அனுமதிக்கலாம்.. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை யாரையும் உள்ளே வரக்கூடாதுன்னு தெரியும் இல்லை?" என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.. இந்த வாக்குவாதம் அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.. அப்போதுதான், வாக்கு எந்திரம் இருக்கும் கட்டடத்துக்கு பாதுகாப்பு போடப்படவில்லை என்ற மற்றொரு தகவல் சோஷியல் மீடியாவில் பரவ ஆரம்பித்துவிட்டது..

   வாக்கு எண்ணிக்கை

  வாக்கு எண்ணிக்கை

  இப்படி தினம் தினம் பிரச்சனைகள், தமிழகத்தில் நடந்து வருகின்றன.. இதையெல்லாம் சமாளிக்கதான், ரிசல்ட்டை உடனே எண்ண கூடாதா? எங்கியோ அசாமில் தேர்தல் நடந்தால், அது எப்படி தமிழக தேர்தலை பாதிக்கும்? எதற்காக ரிசல்ட்டுக்கு இவ்வளவு நாள் கேப்? என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.

  English summary
  TN Assembly Election: Some Election counting center problem in Tamilnadu
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X