• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"ரிசல்ட்".. எல்லாமே கை மீறி போன பிறகு.. "ஒப்புக்கு" அறிவிப்பு.. வாங்கி கட்டும் தேர்தல் ஆணையம்!

Google Oneindia Tamil News

சென்னை: எல்லாமே கைமீறி போன பிறகு, வெற்றி கொண்டாட்டத்தை ஒப்புக்காக, தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளதா? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்யாமல் லட்சக்கணக்கில் மக்களை அலைய விட்டு வேடிக்கை பார்த்த தேர்தல் ஆணையம் அனைவரின் வாயிலும் விழுந்து வருகிறது.

அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தொடுத்த ஒரு வழக்கில் நேற்று ஹைகோர்ட் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தது. சற்று காட்டமாகவே தனது கருத்தை அது அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தது.

"பிரச்சாரத்தின் போது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. அரசியல் கட்சிகள் இஷ்டம் போல பிரச்சாரம் செய்திருக்கின்றனர்... இதனால்தான் வைரஸ் பரவல் தீவிரமடைந்திருக்கிறது... கோர்ட் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதிலேயே வாங்கி கொள்ளவில்லை...

மே 2-ல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை.. அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம்.. தேர்தல் ஆணையம் அதிரடி! மே 2-ல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை.. அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

 பாதுகாப்பு

பாதுகாப்பு

தமிழகத்தில் கொரோனா 2வது அலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம். உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை... மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உத்தரவிட நேரிடும்" என்று கூறியது.

 அரசியல் கட்சி

அரசியல் கட்சி

அதேபோல, இன்றைய தினம், "மே 2-ல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை" என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டுள்ளது. ஒரு பக்கம் வாக்கு எண்ணிக்கைக்கு தடை போடப்படும் என்ற எச்சரிக்கையும், மற்றொரு புறம் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை என்ற உத்தரவும்தான் பரபரப்பான விவாதங்களை தமிழகத்தில் கிளப்பி விட்டு வருகின்றன.

 ஹைகோர்ட்

ஹைகோர்ட்

இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "கோர்ட் கண்டித்ததில் தவறில்லை.. கடந்த மாதம்வரை கொரோனாவின் 2வது அலையின் பாதிப்பு இவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. இந்த 2வது அலை ஆபத்தானது, பன்மடங்கு பரவக்கூடிய வீரியம் மிக்கது என்று ஜனவரி மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்தும், நாம்தான் அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம். இந்த சமயத்தில் தேர்தலும் நெருங்கிவிடவே, அதிமுக, திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளும்தான் தொண்டர்களை கூட்டி பிரம்மாண்ட பிரச்சாரங்களை நடத்தினர்..

லட்சம்

லட்சம்

அதேசமயம், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.. காரணம், புது கேஸ்கள் இப்போது மூன்றேகால் லட்சத்தை தாண்டியாகிவிட்டது.. இதில், அதிகம் பாதிப்பு டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய, பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் தான்.. அங்கே ஒப்பிடும்போது, தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் மிகவும் குறைவு.. அதனால் இந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள், உரிய முன்னேற்பாடுகளை செய்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றே தெரிகிறது. பெரிய பெரிய ஹாலில்தான் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தற்போது போடப்பட்டுள்ளதால், பாதுகாப்பாகவே ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என தெரிகிறது.

 லேப்டாப்

லேப்டாப்

அதுமட்டுமல்ல, வாக்கு எண்ணிக்கையில் காலதாமதம் செய்தால் வேறு சில பிரச்சனைகள் வரக்கூடும்.. இப்போதே, வாக்கு மையங்களில் கண்டெய்னர்கள் வருவதாகவும், லேப்டாப்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் உள்ளன.. தேவையில்லாத சந்தேகங்கள் எழுவதற்கு வாய்ப்பு தர க்கூடாது.. மக்களிடமும் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால், இதுபோன்ற விஷயங்களையும் கோர்ட் பரிசீலிக்கவே செய்யும் என்பதால், ரிசல்ட் தள்ளி போக வாய்ப்பில்லை.

 வெற்றி கொண்டாட்டம்

வெற்றி கொண்டாட்டம்

ஆனால், தேர்தல் ஆணையம், தலையை விட்டுவிட்டு இப்போது வாலை பிடித்து கொண்டிருக்கிறது.. தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரை ரோட்டில் நடமாட விட்டு வேடிக்கை பார்த்தது.. இப்போது வெற்றி கொண்டாட்டத்தை தடை செய்ய முன்வந்துள்ளது.. அதாவது எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய தவறி விட்டது.. இந்த நேரத்தில் எல்லாமும் கை மீறி போன பின்னர் ஒப்புக்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதா?

 தொண்டர்கள்

தொண்டர்கள்

இதே போல ஆரம்பத்திலிருந்தே தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுடனும், சமூக பொறுப்புணர்வுடனும் நடந்து கொண்டிருந்தால் இந்த கொரோனா 2வது அலை இந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்காதே..? மே 2-ம் தேதி, எவ்வளவுதான் தடை விதித்தாலும், வெற்றி பெற்ற கட்சிகளின் தொண்டர்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.. திமுக அல்லது அதிமுக கட்சி வெற்றி பெறுவதாக வைத்து கொண்டாலும், அந்த கட்சியின் தொண்டர்கள்தான் அன்றைய தினம் திரண்டு இருப்பார்கள்.. காவல்துறைக்கு கூடுதல் பொறுப்பு வந்துள்ளது..

 பதவியேற்பு விழா

பதவியேற்பு விழா

இருந்தாலும், தங்கள் கட்சி தொண்டர்களை வெற்றி பெறும் கட்சி தலைமைதான் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்.. "யாரும் கூட்டம் சேர வேண்டாம், ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கட்சி தலைமையே ஒரு அறிக்கை விட்டால், இது ஓரளவு பயன்தரும். அதேபோல, வெற்றி பெறும் கட்சி, தன்னுடைய பதவியேற்பு விழாவையும் சிம்பிளாக நடத்தி கொள்ள முடிவெடுக்கலாம்.. இதுபோன்ற செயல்களில்தான்இனி நாம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது" என்றனர்.

English summary
TN Assembly Election: Will the vote count be postponed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X