சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு பக்கம் ஸ்டாலின்.. மறுபக்கம் சீனியர்ஸ்.. திமுக புதுப் பழக்கம்..விடுமா அதிமுக.புடிச்சாங்க பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் சட்டசபை தேர்தலை முன்வைத்து நித்தம் நித்தம் அறிக்கை யுத்தம் நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அரசை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதற்கு முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தந்து வந்தார்.

"தங்கச்சியைதான் கட்டிக்குவேன்".. அடம் பிடித்த ரவுடி.. அம்மிக்கல்லை தலையில் போட்டு.. பிணமான மணிகண்டன்

புதிய யுக்தி

புதிய யுக்தி

பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் தந்து வந்தார். ஒருகட்டத்தில் திடீரென ஒவ்வொரு பிரச்சனைக்கும் திமுகவின் மூத்த தலைவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு அறிக்கை விடுவது என புதிய யுக்தியை திமுக கையில் எடுத்தது.

அறிக்கை விடும் 2-ம் நிலை தலைவர்கள்

அறிக்கை விடும் 2-ம் நிலை தலைவர்கள்

பொதுவாக கருணாநிதி காலத்தில் எப்போதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பவே இந்த யுக்தி கையில் எடுக்கப்படும். ஆனால் தற்போது திமுகவில் நாள்தோறும் மூத்த தலைவர்கள் ஆளுக்கு ஒரு அறிக்கை விடுகிற பழக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் அறிக்கை நாள்தோறும் வரும் என்றாலும் இந்த தலைவர்களின் அறிக்கையும் தவறாமல் வந்துவிடுகிறது.

திமுகவுக்கு அதிமுக பதிலடி

திமுகவுக்கு அதிமுக பதிலடி

திமுகவின் இந்த வியூகத்துக்கு அதிமுக என்ன மவுனமாகவா இருக்கப் போகிறது? அதிமுகவின் அமைச்சர்களும் திமுகவின் ஒவ்வொரு அறிக்கைக்கும் பதிலடி என கோதாவில் குதித்துவிட்டனர். இப்படி அதிமுகவும், திமுகவும் அறிக்கைப் போர் நடத்துவது என்பதே இரு கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறோம் என்பதை வெளிப்படுத்தத்தானாம்.. இதற்கு ஐடியா கொடுத்தவர்கள் திமுக பக்கம் பிரஷாந்த் கிஷோர் எனில் அதிமுக பக்கம் சுனில்.

ஒர்க் அவுட் ஆகாத பிகே வியூகம்

ஒர்க் அவுட் ஆகாத பிகே வியூகம்

பிரஷாந்த் கிஷோரும் சுனிலும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பிராஜெக்ட்டை செயல்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். இதனால் ஸ்டாலினைப் போலவே உதயநிதி, 2-ம் நிலை தலைவர்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிர்வாகிகளுடன் பேச வைக்கின்றனர். அத்துடன் 2-ம் கட்ட தலைவர்களை செய்தியாளர்களுடன் கலந்துரையாட வைக்க பி.கே. டீம் முயற்சித்தது. ஆனால் அது கை கொடுக்கவில்லை.

Recommended Video

    Tamilnadu Lockdown Extension | Salem District பிரிப்பு பற்றி Edappadi Palanisamy பதில்
    சமூக வலைதளங்களில் அமைச்சர்

    சமூக வலைதளங்களில் அமைச்சர்

    இதே பாணியைத்தான் அதிமுக முகாமில் சுனிலும் செயல்படுத்தி வருகிறார். அதிமுக அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் படுதீவிரமாக இறங்கியுள்ளனர். அரசின் நடவடிக்கைகள், விளக்கங்கள் அத்தனையையும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் டக் டக்கென வெளிப்படுத்துகின்றனர். இரு கட்சிகளும் மாறி மாறி அறிக்கை யுத்தம் நடத்துவதன் மூலம் சட்டசபை தேர்தலுக்கான பிள்ளையார் சுழியை தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

    English summary
    Ahead of Tamilnadu Assembly Elections, AIADMK gave counter strategy against DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X