சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்களும் கேம் ஆடுவோம்-திமுகவுக்கு போன சீனியர்களை மீண்டும் இழுக்க முடியுமா? ஆழம் பார்க்கும் அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சிகளின் ஆடுபுலி ஆட்டங்கள் அதகளமாகிவருகின்றன. அதுவும் கட்சி தாவல்கள் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனவை முன்வைத்து தேர்தல் நடைபெறுமா? ஒத்திவைக்கப்படுமா? என்கிற விவாதங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

 "கொரோனா கொண்டான்".. செல்லூர் ராஜுவை வரவேற்க திரண்ட கூட்டம்.. சமூக இடைவெளி போயே போச்!

ஜரூர் தேர்தல் பணிகள்

ஜரூர் தேர்தல் பணிகள்

இன்னொரு பக்கம் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஜரூராக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்சிகளின் கட்டமைப்புகளை வலிமைப்படுத்துதல், அதன் மூலம் ஒதுங்கி நிற்கும் பிரமுகர்களுக்கும் பதவி கொடுத்தல், கட்சிகளில் இருந்து பிரமுகர்களை தாவ வைத்தல் என்பவைதான் இப்போது ஹாட்டாபிக்காக ஓடுகிறது.

உற்சாக, உள்ளடி அதிமுக

உற்சாக, உள்ளடி அதிமுக

அதிமுகவில் அண்மையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒதுக்கப்பட்டிருந்த பல சீனியர் தலைவர்களும் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளனர். இதனால் நிச்சயம் கோஷ்டி பூசல் அதிகரிக்கும் என்றாலும் அடிப்படையில் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒன்று சேர்க்கும் ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஆட்கள் வளைப்பில் திமுக- பாஜக

ஆட்கள் வளைப்பில் திமுக- பாஜக

அதேபோல் திமுகவில் இருந்து தாவியவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுத்து அதிர வைத்தது பாஜக. இதற்கு பதிலடியாக பாஜகவில் இருந்து லிஸ்ட் போட்டு ஆட்களை இழுக்கும் வேலைகளை திமுக துரிதமாக மேற்கொண்டு வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் இவரெல்லாமா வருவார்? என அதிர்ச்சியளிக்கும் பலரது பெயர்களும் உருண்டு கொண்டிருக்கின்றன.

மாஜி அதிமுக சீனியர்களுக்கு குறி

மாஜி அதிமுக சீனியர்களுக்கு குறி

இன்னொரு பக்கம் அதிமுகவில் சசிகலா வெளியே வந்துவிடுவாரா? சசிகலா வந்தால் அதிமுக என்னவாக இருக்கும்? என்கிற விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் திமுகவைப் போல நாமும் ஆட்களை இழுக்கும் கேம் ஆடினால் என்ன என்கிற ஒரு மூவ் அதிமுகவில் மேற்கொள்ளப்படுகிறதாம். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போன சீனியர்களை குறிவைத்து இந்த ஆட்டம் தொடங்கப்பட்டிருக்கிறதாம்.

திமுகவுக்கு நிச்சயம் சேதாரமாம்

திமுகவுக்கு நிச்சயம் சேதாரமாம்

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போன பெரும்பாலானோர் அக்கட்சியின் முகங்களாகவே மாறிவிட்டனர். அப்படியானவர்களையே அசைத்துப் பார்த்துவிட்டால் நிச்சயம் திமுகவுக்கு பலத்த சேதாராமாகும் என்பதுதான் அதிமுகவினரின் கணக்கு. இந்த கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா? என்பதற்கான உடனடி வாய்ப்புகள் இல்லை எனிலும் இது நடந்தால் திமுகவின் அடித்தளத்துக்கே அதிமுக வைக்கும் மிகப் பெரும் ஆப்பாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Sources said that AIADMK is now targetting thier former senior pleaders who are in DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X