• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழகத்திலும் பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமா? பல தலைகளுக்கு வலையாம்...ரெக்கை கட்டும் யூகங்கள்!

|

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகத்திலும் பாஜகவின் அரசியல் ஆட்டம் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தை வளைத்ததைப் போல ஏகப்பட்ட பெருந்தலைகளுக்கு பாஜக வலைவிரித்து காத்திருப்பதாக அடுத்தடுத்து யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.

தேர்தலில் போட்டியிட தயங்கிய துரைமுருகன்... தயாளு அம்மாள் தந்த ரூ10,000... ஸ்டாலின் சொன்ன ப்ளாஷ் பேக்

பல்வேறு மாநிலங்களிலும் பாஜக நடத்திய அரசியல் திருவிளையாடல்கள் அத்தனையும் அதிரடி ரகம். ஒரு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற சொற்ப எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கைதான் தேவை என்கிற நிலை பாஜகவுக்கு இருந்தால் போதும்.

ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை கணிசமாக கூண்டோடு வளைத்து ராஜினாமா செய்ய வைத்து புதிய அரசை அமைத்துவிடுவது என்பது பாஜகவின் ஸ்டைல். கர்நாடகா, மத்திய பிரதேசம் ஏன் இப்போது ராஜஸ்தானிலும் இந்த உக்கிர சித்துவிளையாட்டில்தான் பாஜக ரொம்பவே பிஸி.

ராமர் கோவில் பூமி பூஜை, தேசிய ஒற்றுமையின் கொண்டாட்டம்.. பிரியங்கா அறிக்கை.. முதல் முறையாக ஓபன் ஆதரவு

தமிழகமும் பாஜகவும்

தமிழகமும் பாஜகவும்

ஆனால் பாஜகவின் அதிரிபுதிரி ஆட்டங்கள் தமிழகத்தில் மட்டும் நடக்காமலேயே இருந்தது. அதுவும் இருபெரும் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவுகளின் போதே பாஜகவின் ஆட்டத்தை தமிழகம் எதிர்பார்த்தது. ஆனாலும் எல்லோரும் எதிர்பார்த்தபடியான பாஜகவின் கேம் தொடங்கப்படவில்லை. தமிழகத்துக்குள் மட்டும் பாஜக ஏன் ஆட்டத்தை காட்டவில்லை? என்பதே பெரிய விவாதமாகவும் இருந்தது.

தமிழக தேர்தல்

தமிழக தேர்தல்

இன்னொரு பக்கம் மிகப் பெரும் அரசியல் பிரளயத்தை உருவாக்கவே பாஜக வியூகம் வகுத்து அமைதி காக்கிறது என்றும் சொல்லப்பட்டது. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக இருகட்சிகளும் படுதீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

 பாஜக ஆட்டம் ஆரம்பம்

பாஜக ஆட்டம் ஆரம்பம்

இந்த நிலையில்தான் நாங்களும் ஆட்டத்தை தொடங்கிவிட்டோம் என்பதை அறிவிக்கும் வகையில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தை வளைத்துப் போட்டுள்ளது பாஜக. திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியைவிட்டு விலகி அதுவும் பாஜகவுக்கு செல்வது என்பது நிச்சயம் அந்த கட்சிக்கு மிகப் பெரும் அதிர்ச்சிதான்.

அவரா? இவரா? யூகங்கள்

அவரா? இவரா? யூகங்கள்

பாஜகவின் இந்த ஆட்டம் கு.க.செல்வத்துடன் முடியப்போவதில்லை.இனிதான் ஆட்டமே ஆரம்பம் என்பதைப் போல திமுகவின் பல மூத்த சீனியர்களும் கூட பாஜக பக்கம் போய்விடுவார்கள் என யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. திமுகவில் இருப்பதாலேயே எத்தனையோ மறைமுக நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் பல கல்வி தந்தையர்களின் பெயர்களும் கூட வரிசையாக இதில் அடிபடுகின்றன. ஒவ்வொருவர் பெயர் அடிபடுவதற்கு பின்னாலும் ஓராயிரம் காரணங்கள் சொல்லப்பட்டும் வருகின்றன.

  DMK-BJP Alliance|மீண்டும் நடக்குமா 'யதார்த்த அரசியல்?' | Oneindia Tamil
  அப்படித்தான் நடக்கும் போல?

  அப்படித்தான் நடக்கும் போல?

  ஒருகாலத்தில் அதிமுகவை அப்படியே கபளீகரம் செய்துவிடும் பாஜக; அதற்கேற்பவே அத்தனையும் நடக்கிறது என பேசியது தமிழக அரசியல் களம். இப்போது போகிற போக்கைப் பார்த்தால் திரிபுராவில் காங்கிரஸை விழுங்கியதைப் போல மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டுகளை தன்வயப்படுத்திய போது எங்கே திமுகவின் பெருந்தலைகளையும் பலபல காரணங்களை முன்வைத்து தம்வசமாக்குமோ பாஜக என்கிற விவாதமும் திமுகவில் பலமாகவே கேட்க முடிகிறது. அரசியலில் எல்லாம் சகஜமப்பா!

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Ahead of TamilNadu Assembly Elections BJP Start its Political Games in the State.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X