சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results 2019: ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி செய்த தியாகம்- வீடியோ

    சென்னை:2021ம் ஆண்டு வரை.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது தற்போதைய 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லி இருக்கின்றன.

    லோக்சபா தேர்தல் முடிவுகள்.. மத்தியில் பாஜக ஆட்சியமைக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. 22 தொகுதி இடைத்தேர்தல் நிலவரங்கள் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை உறுதி செய்திருக்கின்றன.

    லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னர், மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது... எடப்பாடி தலைமையிலான ஆளும் அதிமுக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலைக்கப்படும். அதன் பின்னர் சட்டசபை தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன் சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்

    தலைவிதியை நிர்ணயிக்கும் 22

    தலைவிதியை நிர்ணயிக்கும் 22

    ஆனால், தற்போது தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்பதை மிக வலுவாக உறுதிப்படுத்தி இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதால் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசுக்கு எவ்வித சிக்கலும் நேராது.

    114 அதிமுக எம்எல்ஏக்கள்

    114 அதிமுக எம்எல்ஏக்கள்

    சரி... இப்போது தமிழக நிலவரத்துக்கு வருவோம். தமிழகத்தில் அதிமுகவின் பலம் 113. அதில் சபாநாயகரையும் சேர்த்தால் 114 வருகிறது. இந்த 114 பேரில் 3 அதிமுக எம்எல்ஏக்கள் அமமுகவின் டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கொட்டுன வார்த்தைக்கெல்லாம் சேர்த்து வைத்து எச். ராஜா தலையில்கொட்டிய சிவகங்கை! கொட்டுன வார்த்தைக்கெல்லாம் சேர்த்து வைத்து எச். ராஜா தலையில்கொட்டிய சிவகங்கை!

    கணக்கீடு என்ன?

    கணக்கீடு என்ன?

    எனவே... அந்த 3 பேரை கணக்கில் இருந்து கழித்துவிட்டால் 110 பேர் என்ற எண்ணிக்கை நமக்கு கிடைக்கிறது. அவர்களில் கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி தற்போது திமுகவை ஆதரிக்கிறார் (காரணம் லோக்சபா தேர்தலில் பாஜகவை அதிமுக ஆதரித்ததால்). அந்த ஒரு எம்எல்ஏவையும் கழித்துவிட்டு பார்த்தால் அதிமுக 109 எம்எல்ஏக்களை பெற்று வசதியாக உட்கார்ந்திருக்கிறது.

    தற்போதைய நிலைமை

    தற்போதைய நிலைமை

    சரி... இப்போதுள்ள நிலைமைக்கு வருவோம். இந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 11 இடங்களில் முன்னிலை. 10 இடங்களில் முன்னிலை என்று மாறி, மாறி நிலவரங்கள் வெளி வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ (நாங்குநேரி தொகுதி) ஹெச் வசந்தகுமார், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் எம்பி பதவிக்கும் போட்டியிட்டு இருக்கிறார். 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார். எனவே அவரது வெற்றி என்பது நிச்சயமாகி விட்டது.

    கொடுத்ததே 5 தொகுதிகள்தான்.. அதையும் கோட்டை விட்டு வாஷ் அவுட்டான தமிழக பாஜக!கொடுத்ததே 5 தொகுதிகள்தான்.. அதையும் கோட்டை விட்டு வாஷ் அவுட்டான தமிழக பாஜக!

    போதும் 116 எம்எல்ஏக்கள்

    போதும் 116 எம்எல்ஏக்கள்

    அவர் வெற்றி பெற்றுவிட்டால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார். அதன் பிறகு, சட்டசபையின் இடங்கள் 233 ஆக மாறும். அதில் 116 இடங்களை பெற்றாலே, ஆளும் அதிமுக அரசுக்கு எந்த பங்கமும் வராது. தற்போது அதிமுக வசம், 109 இடங்கள் இருக்கின்றன.

    2021 வரை எடப்பாடி தான்

    2021 வரை எடப்பாடி தான்

    மேலும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெறும் 7 இடங்களில் வெற்றி பெற்றாலே, அதிமுக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதனால், 2021ம் ஆண்டு வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. மொத்தத்தில் ஸ்டாலின் ஆட்சி கலைப்பு, முதல்வர் கனவு என்பது 2021 வரை நிறைவேறாது என்பதே இப்போதைய அரசியல் நிலைமை.

    English summary
    Tn assembly results showing that edapaddi palanisamy leads chief minister upto 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X