சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டப்பேரவை ஏப் 9ம் வரை 23 நாட்கள் நடக்கிறது.. எந்த நாளில் எந்த துறை மானிய கோரிக்கை விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்.9ம் தேதி வரை நடைபெறும்: என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

tn assembly session 2020 schedule : Department wise debate date announced

தமிழக சட்டப்பேரவை வரும் 9ம் தேதி கூடுகிறது. சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செலவ்ம், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கேஆர் ராமசாமி, உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

tn assembly session 2020 schedule : Department wise debate date announced

இந்த கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பத குறித்து முடிவு செய்யப்பட்து. இதன்படி ஏப்ரல் 9ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

tn assembly session 2020 schedule : Department wise debate date announced

சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில

  • மார்ச் 9ம் தேதி இரங்கல் குறிப்பு
  • மார்ச் 10ம் தேதி பேரவை கூட்டம் இல்லை
  • மார்ச் 11ம் தேதி வனம் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை)
  • மார்ச் 12ம் தேதி பள்ளி கல்வி துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, உயர் கல்வித்துறை
  • மார்ச் 13 ம் தேதி எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை
  • மார்ச் 14ம் தேதி அரசு விடுமுறை
  • மார்ச் 15ம் தேதி அரசு விடுமுறை
  • மார்ச் 16ம் தேதி நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை
  • மார்ச் 17 ம் தேதி மீன்வளம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை), பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, கால்நடை பராமரிப்பு
  • 'மார்ச் 18ம் தேதி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டங்கள் (பொதுப்பணித்துறை), பாசனம் (பொதுபாசனத் துறை)
  • மார்ச் 19ம் தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
  • மார்ச் 20ம் தேதி நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள்(உள்துறை, மதுவிலக்கு மற்றும ஆயத்துறை), சட்டத்துறை
  • மார்ச் 21ம் தேதி சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
  • மார்ச் 22ம் தேதி அரசு விடுமுறை
  • மார்ச் 23ம் தேதி முன்பண மானியகோரிக்கை, துணை நிதிநிலைஅறிக்கை, வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை
  • மார்ச் 24ம் தேதி தொழில்துறை மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள்
  • மார்ச் 25ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை, 26ம் தேதி கைத்தறி, செய்தி மற்றும்விளம்பரம், எழுது பொருள்
  • மார்ச் 27ம் தேதி காவல் மற்றும் தீயணைப்பு
  • மார்ச் 28ம் தேதி அரசு விடுமுறை
  • மார்ச் 29ம் தேதி அரசு விடுமுறை
  • மார்ச் 30ம் தேதி காவல்துறை பதில் உரை, வணிக வரிகள், முத்திரை தாள், பால்வளம்
  • மார்ச் 31ம் தேதி வேளாண்மை துறை
  • ஏப்ரல் 1ம் தேதி தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் வருவாய், இயற்கை பேரிடர்
  • ஏப்ரல் 2ம் தேதி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
  • ஏப்ரல் 3ம் தேதி சுற்றுலா கலை மற்றும் பண்பாடு , இந்து சமய அறநிலையத்துறை
  • ஏப்ரல் 4ம் தேதி தொழிலாளர் நலம், வேலை வாய்ப்பு, கதர் கிராம தொழில்கள்
  • ஏப்ரல் 5ம் தேதி விடுமுறை
  • ஏபரல் 6ம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறை
  • ஏப்ரல் 7ம் தேதி இயக்க ஊர்திகள் குறித்த போக்குவரத்து துறை
  • ஏப்ரல் 8ம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை
  • ஏப்ரல் 9ம் தேதி பொதுத்துறை, மானியங்கள், ஆளுநர், சட்டமன்றம். நிதித்துறை, திட்டங்கள் வளர்ச்சி, ஓய்வூதியங்கள், அரசு அலுவலர்கள்

ஏப்ரல் 9ம் தேதியுடன் சட்டப்பேரவை முடிகிறது. மொத்தம் 21 நாட்கள் சட்டமன்றம் நடைபெறுகிறது. இரங்கல் குறிப்பையும் சேர்த்தால் 23 நாட்கள் சட்டப்பேரவை நடைபெற உள்ளது. பேரவை காலை 10 மணிக்கு கூடும்.9ம் தேதி அன்று மட்டும் வினாக்கள், விடைகளுக்கு நேரமில்லை. மற்ற எல்லா நாட்களும் வினாக்கள் விடைகள் இருக்கிறது" இவ்வாறு கூறினார்.

English summary
tn assembly budget session end on april 9th : Department wise debate dates announced by speaker dhanapal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X