சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது அணை விவகாரம்.. நாளை கூடுகிறது தமிழக சட்டசபை!

மேகதாது அணை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது தமிழக சட்டசபை- வீடியோ

    சென்னை: மேகதாது அணை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு சென்னை - பூவிருந்தவல்லியில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து அங்குள்ள 21 வார்டுகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    TN assembly will commence on tomorrow to discuss on Meghatad dam issue

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் எந்த உண்மையும் கிடையாது,

    குற்றச்சாட்டில் எந்த சாரமும் கிடையாது என்றார். மேகதாது அணைக்கு எதிராக தமிழகத்தில் நாளை சிறப்பு சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது. நாளை நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கட்ட போடப்பட்டுள்ள திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

    தானே புயல், ஒக்கி புயல் பாதிப்பின் போது ஒரு சில பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதில் சிக்கல் இருந்தது. கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து உள்ளது. மறு சீரமைப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu assembly will commence on tomorrow to discuss on Karnataka's Meghatad dam project issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X