சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்

தமிழக பாஜகவிற்கு முழுக்க முழுக்க புதிய முகம் ஒருவர்தான் தலைவராக வருவார், இதில் சர்ப்ரைஸ் ஒன்று நிகழலாம் என்று திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜகவிற்கு முழுக்க முழுக்க புதிய முகம் ஒருவர்தான் தலைவராக வருவார், இதில் சர்ப்ரைஸ் ஒன்று நிகழலாம் என்று திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றார். அவர் சென்ற பின் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகி உள்ளது.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள். தேசிய பாஜக தலைமை கடைசிகட்ட ஆலோசனைகளை இதற்காக நடத்தி வருகிறது.

டெல்லி சட்டசபை தேர்தல்- பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? 'நோ' முதல்வர் வேட்பாளர்?டெல்லி சட்டசபை தேர்தல்- பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? 'நோ' முதல்வர் வேட்பாளர்?

என்ன டிவிட்

இது குறித்து திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டில், தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. என்னுடைய கணிப்புப்படி தமிழக பாஜகவிற்கு பழைய மூத்த தலைவர்கள் யாரும் தலைவராக போவது இல்லை. பாஜகவிற்காக கடுமையாக பேசிய, எப்போதும் பாஜகவின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய நபர்கள் தலைவராக போவது இல்லை.

என்னுடைய கணிப்பு

என்னுடைய கணிப்பு

என்னுடைய கணிப்புப்படி, தமிழக பாஜகவிற்கு புதிய முகம் ஒருவர்தான் தலைவராக வருவார். விரைவில் அறிவிப்பு வரலாம். இதில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது என்று செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு டிவிட்

இன்னொரு டிவிட்

அவர் தன்னுடைய இன்னொரு டிவிட்டர் போஸ்டில், தமிழக பாஜக இந்த முறை தமிழகத்தில் புதிய அரசியலை மேற்கொள்ளும் . புதிய முகத்தை கொண்டு வருவார்கள். தங்கள் அரசியல் திட்டங்களை சீரமைக்க முயற்சி செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன பதவி

என்ன பதவி

இந்த தலைவர் பதவிக்காக எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால் இவர்கள் இல்லாமல் புது முகம் ஒருவர்தான் தலைவராக வருவார் என்கிறார்கள். தேசிய அரசியலில் இருக்கும் ஒருவர் தலைவராக வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Tamilnadu BJP chief mostly be a new face says DMK MP Senthilkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X