சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடே! பொன்மனச் செம்மலின் -எம்ஜிஆரின் அம்சமாய் மோடியை கண்டோமடா- தமிழக பாஜகவின் பிரசாரப் பாடல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரைக்கான பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொன்மனச் செம்மலின் அம்சமாய் மோடியை கண்டோமடா என்ற வரிகள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க அந்த கட்சி கையில் எடுக்காத அஜெண்டா எதுவுமே இல்லை. ஆனால் இந்த வியூகங்கள் எதுவுமே தமிழக மக்களிடம் ஒருதுளியும் எடுபடவில்லை. பாஜக என்றாலே அது தமிழருக்கு- தமிழகத்துக்கு எதிரான கட்சியாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் அருந்ததியர் ஜாதியை சேர்ந்த முருகனை தமிழக தலைவராக்கியது பாஜக மேலிடம். அவரும் தம்மால் முடிந்த அளவுக்கு ஸ்கோர் செய்ய படாதபாடுபட்டு வருகிறார். திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வத்தை பாஜகவில் இணைத்து சாதித்ததுதான் அவரது முக்கியமான நடவடிக்கை.

எடப்பாடி முதல்வர் வேட்பாளரா ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? பாஜக மேலிடமே முடிவு செய்யும்.. வானதி சீனிவாசன் எடப்பாடி முதல்வர் வேட்பாளரா ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? பாஜக மேலிடமே முடிவு செய்யும்.. வானதி சீனிவாசன்

பாஜகவின் வேல் கோஷம்

பாஜகவின் வேல் கோஷம்

இதன்பின்னர் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் யூ டியூப் எப்பவோ விமர்சித்ததை வைத்துக் கொண்டு வேல் வேல் வெற்றி வேல் என்ற முழக்கத்தை மட்டும் தாரக மந்திரமாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது பாஜக. அதுவும் பாஜக தலைவர் பெயரும் முருகன் என்று இருப்பதாலோ என்னவோ வேலைவிட்டுவிடுவதாக இல்லை பாஜக.

முருகனின் யாத்திரை

முருகனின் யாத்திரை

இதன் அடுத்த கட்டமாக ஆறு படை வீடு -வெற்றிவேல் யாத்திரையை முருகன் மேற்கொள்ள இருக்கிறார். அடுத்த மாதம் முதல் இந்த வெற்றிவேல் யாத்திரை தொடங்க இருக்கிறது. இதற்கான லோகோ, பிரசார பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வேல் வேல் ... வாராரு வாராரு முருகவேல் கொண்டு என பிரசார பாடல் உருவாக்கப்பட்டது.

எம்ஜிஆர் - மோடி

இதில் ஒரு இடத்தில், கறுப்பு கூட்டம், சிவப்பு கூட்டம் இரண்டும் வெல்லும் காவிகூட்டம் என்கிற வரியும் இடம்பெறுகிறது. இதற்கு அடுத்ததாக இருப்பதுதான் செம ஹைலைட். பொன்மனச் செம்மலின் அம்சமாய் மோடியை கண்டோமடா என்கிற பாடல் வரிகளில் எம்ஜிஆரின் படமும் அதனை அடுத்து பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றிருக்கிறது. எம்ஜிஆருக்கும் மோடிக்கும் எப்படி இவர்கள் கனெக்சன் எடுத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் புரியாத புதிர்தான்.

விமர்சனங்கள் குவிகிறது

விமர்சனங்கள் குவிகிறது

ஆனால் முருகன், வேல் யாத்திரை போன்ற அம்சங்களை இடைவிடாமல் பாஜக தூக்கிக் கொண்டு அலைந்தாலும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; நிராகரிப்பார்கள் என பாஜகவின் சமூக வலைதளப் பக்கங்களில் வழக்கம் போல விமர்சித்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

English summary
Tamilnadu BJP Compares MGR and PM Modi in its campaign song.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X