சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் விடுதலைப் புலிகள் புத்தகம்- தடை செய்ய பாஜக வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 43-வது புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆதரவு- எதிர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

சென்னை புத்தக கண்காட்சியில் இம்முறை சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிரான நூல்களுடன் அமைக்கப்பட்டிருந்த மக்கள் செய்தி மையம் ஸ்டாலை புத்தக கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்பினர் அகற்றினர்.

TN BJP demands to remove LTTE related Books from Chennai Book Fair

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை விவகாரமும் புத்தக கண்காட்சியை மையம் கொண்டிருக்கிறது.

தற்போதைய புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பான நூல்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் கூடிய ஆதரவு மற்றும் எதிரான புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின்றன என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்- சைடு பிசினஸ் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்கின் ஜனாதிபதி பதக்கம் பறிப்பு?தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்- சைடு பிசினஸ் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்கின் ஜனாதிபதி பதக்கம் பறிப்பு?

ஈழப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளை கடந்த நிலையில் அது குறித்த தேடல் வாசகர்களிடம் இருந்து வருவதே விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனர் பதிப்பாளர்கள். இந்நிலையில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

English summary
Tamilnadu BJP has demanded to remove Books on LTTE related from the 43rd Chennai Book Fair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X