சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை...தமிழக பாஜக நிர்மல் குமாரின் சட்டத்திற்கு எதிரான வீடியோ பதிவு!!

Google Oneindia Tamil News

சென்னை: ஹத்ராஸ் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்தார். அவரது முகத்தை தெளிவாக காட்டும் வீடியோவை தமிழ்நாடு பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுவாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களின் புகைப்படத்தை அல்லது வீடியோவை வெளியிடக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி நிர்மல் குமார் தனது டிவிட்டரில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

TN BJP IT convenor shares video of Hathras victim without blurring her face

அந்த பதிவில், ''அவர் நன்றாக பேசுகிறார். அவரது நாக்கு துண்டிக்கப்ப்டவில்லை. பாலியல் பலாத்காரம் குறித்தும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. அப்பாவி மக்களைக் கொண்டு எப்போதுமே இத்தாலி மாஃபியாக்கள் மலிவான அரசியல் செய்து வருகின்றனர்'' என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று ஹத்ராஸ் சம்பவம் குறித்து பேசி இருந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ''நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் ஹத்ராஸ் சம்பவத்தால் கோபம் அடைந்துள்ளனர். கொடுமையான சம்பவத்தால், நமது நாட்டின் மகள் துயரப்பட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பது, நமது சமுதாயத்தின் மீது படிந்து இருக்கும் கறை என்று தெரிவித்து இருந்தார்.

TN BJP IT convenor shares video of Hathras victim without blurring her face

இதற்கும் பதில் அளிக்கும் வகையில் நிர்மல் குமாரின் பதிவு அமைந்து இருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி நடத்துகிறார்... அதற்கு சாட்சியா நல்ல மழை பெய்கிறது - செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி நடத்துகிறார்... அதற்கு சாட்சியா நல்ல மழை பெய்கிறது - செங்கோட்டையன்

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்களின் புகைப்படங்களை, பெயர்களை வெளியிடக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை மீறி நிர்மல் குமார் பதிவிட்டு உள்ளார். ஆனால், இதுவரைக்கும் அவர் மீது தமிழக பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரும் தனது ட்விட்டர் பதிவை நீக்கவில்லை.

English summary
TN BJP IT convenor shares video of Hathras victim without blurring her face
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X