India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.. வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும், திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது.. அதன்படி, திருச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதமும் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended Video - Watch Now

  இந்தியாவில் ரெண்டே ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க! மோடி, அமித்ஷா பேரை சொன்ன ராதாரவி

  ஒருபக்கம் அதிமுகவில் புயல் அடித்து கொண்டிருக்கிறது.. அந்த கட்சி யார் கையில் போக போகிறது என்று தெரியாத நிலைமை உள்ளது..

  ஆனால், தமிழக பாஜகவோ, திமுகவை கேப் விடாமல் விமர்சித்து கொண்டிருக்கிறது.. திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களை நிலைநாட்டிக் கொள்ளவே ஆர்வம் அதிகமாக காட்டி கொண்டு வருகிறது தமிழக பாஜக..

  மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி

   வீக்னஸ்

  வீக்னஸ்

  இதற்கு சமீபகால மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகளே சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன.. போராட்டம் அறிவிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது, மிரட்டுவது, சவால் விடுவது, என பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார். வழக்கமாக, இதையெல்லாம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான் செய்ய வேண்டும் என்றாலும், அதிமுகவின் வீக்னஸை பயன்படுத்தி, பாஜக தன்னுடைய அரசியலை செய்ய ஆரம்பித்துள்ளது.. அந்தவகையில், அந்தந்த சமயங்களில் நடக்கும் நிகழ்வுகளை கொண்டு பாஜக ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம்.

   வாக்குறுதிகள்

  வாக்குறுதிகள்

  பள்ளி சிறுமி மரணம், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்டவைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வந்த நிலையில், இப்போதைக்கு, பெரிதாக காரணம் இல்லாத நிலையில், திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், ஆட்சி அமைத்து ஓராண்டிற்குப் பின்னரும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை அதிரடியாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு அறிவித்தது.. அனைத்து மாவட்டங்களிலும் திமுக அரசைக் கண்டித்து 5ம் தேதி அதாவது இன்றைய தினம், இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்க போவதாகவும், பல்வேறு பாஜக நிர்வாகிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள் என்றும் அறிவிப்பு வெளியானது.

   கொளத்தூர்

  கொளத்தூர்

  அந்த வகையில், தமிழகம் முழுவதும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிவிட்டது.. பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்னையில் இன்று உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார். தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.. வடசென்னை மேற்கு, தெற்கு , வடகிழக்கு தென் சென்னை, கிழக்கு ,மேற்கு, தென் சென்னை, தென் சென்னை கிழக்கு ஆகிய ஏழு மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

   வள்ளுவர் கோட்டம்

  வள்ளுவர் கோட்டம்

  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.. கோவையில் சி.பி .ராதாகிருஷ்ணன் ,வானதி சீனிவாசன், திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்..

  கொளத்தூர்

  கொளத்தூர்

  முன்னதாக,, ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்கு குறி வைத்திருந்தார் அண்ணாமலை.. அதற்கான அனுமதியை காவல்துறையிடம் கேட்டிருந்தது பாஜக... ஆனால், கொளத்தூரில் அனுமதிக்க முடியாது என கறாராக சொல்லிவிட்டதாம் போலீஸ்... அதனால், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜகவுக்கு எந்த இடத்தை போலீஸ் ஒதுக்கியிருந்தது.. எனினும், கொளத்தூர் பகுதியில்தான் நடத்தி விடவேண்டும் என்பதில் உறுதி காட்டுவதால், கொளத்தூரில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்துவாரா? என்ற எதிர்பார்ப்பும் இன்றைய தினம் எழுந்துள்ளது.

  English summary
  tn bjp leader annamalai to lead protest against dmk govt today in chennai திமுக அரசை கண்டித்து சென்னையில இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X