சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கறுப்பர் கூட்டமும் காவி கூட்டமும் ஒன்றா? எப்படி ஒப்பிடலாம்? அதிமுக மீது பாஜக பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: கறுப்பர் கூட்டத்துடன் ஒப்பிட்டு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் விமர்சனம் எழுதப்பட்டதற்குகு தமிழக பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.

தமிழக பாஜக தலைவ்ர் முருகனின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருந்தார். அவரது பேட்டியை முன்வைத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, கறுப்பர் கூட்டமானாலும் சரி.. காவி கூட்டமானாலும் சரி.. என்ற தலைப்பில் ஒரு விமர்சன கட்டுரையை வெளியிட்டிருந்தது.

பீகாரில் காங். 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனம்: சிபிஎம் சாடல்பீகாரில் காங். 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனம்: சிபிஎம் சாடல்

பாஜகவுக்கு வார்னிங்

பாஜகவுக்கு வார்னிங்

அதில், மதங்களின் பெயரால் வாங்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. இந்த கட்டுரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

அமைதி காக்க வேண்டுகோள்

அமைதி காக்க வேண்டுகோள்

நமது அம்மாவின் இந்த கட்டுரை பாஜக தலைவர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறதாம். இருந்தபோதும் அதிமுகவுக்கு எதிரான விமர்சனங்களை மேலும் முன்வைக்காமல் அமைதி காக்க வேண்டும் என்று மாநிலத் தலைமை கேட்டுக் கொண்டிருக்கிறதாம். உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தரும் நிலையில் சர்ச்சை வேண்டாம் என நினைக்கிறதாம் மாநில தலைமை.

கறுப்பர் கூட்டத்துடன் ஒப்பிடுவதா?

கறுப்பர் கூட்டத்துடன் ஒப்பிடுவதா?

இதனிடையே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு வேல் யாத்திரை நடத்த பாஜக தயாராக இருக்கிறது. நாங்கள் அரசாங்கத்திடம் அனுமதி தருமாறு வேண்டுகோள்தான் வைத்திருக்கிறோம். ஆளும் அதிமுக அரசு அவர்களது கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. அதற்காக இந்து கடவுள்களை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்துடன் பாஜகவை ஒப்பிட்டது சரி அல்ல என கூறியிருக்கிறார்.

கூட்டணியில் பிளவு இல்லை

கூட்டணியில் பிளவு இல்லை

மேலும் நமது அம்மாவில் எழுதப்பட்ட விமர்சனம் மகிழ்ச்சியைத் தரவில்லை என்றும் வானதி சீனிவாசன் பதிவு செய்திருக்கிறார். பாஜகவின் பொதுச்செயலாளர் ஆர்.ஆர். சீனிவாசன் கூறுகையில், வேல் யாத்திரை எந்த ஒரு மதத்துக்கும் ஜாதிக்கு எதிரானதும் அல்ல. அரசியல் பிழைகளை சரி செய்யும் ஒரு யாத்திரை. இதனால் அதிமுகவுடனான கூட்டணியில் மோதல் என்பது எல்லாம் எதுவும் இல்லை என்றார்.

தேவை இல்லாதது

தேவை இல்லாதது

பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவிக்கையில், அதிமுகவின் தலையங்கம் தேவை இல்லாதது; விரும்பத்தகாதது. அதை அவர்கள் திரும்பப் பெற வேண்டும். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்கு பணிந்துதான் இப்படி எழுதி இருக்கிறார்கள் என்றார்.

English summary
Tamilnadu BJP leaders said that they were unhappy over the AIADMK Mouthpiece Editorial against the Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X