சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுக்கடைகளை திறக்காதே.. ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே.. தமிழக பாஜகவினர் போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து பாஜகவினர் தங்கள் வீடுகளில் போராட்டம் நடத்தினர்.

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க மாநில அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து பாஜகவினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

தமிழக பாஜக தலைவர் எல் முருகன், பாஜக எம்எல்ஏ எம் ஆர் காந்தி பாஜக பிரமுகர் எச் ராஜா, பாஜக நிர்வாகி கே டி ராகவன், பாஜகவின் குஷ்பு உள்ளிட்டோர் பாஜக அலுவலகத்திலும் அவரவர் வீடுகளிலும் போராட்டம் நடத்தினர்.

நிரந்தரம்

நிரந்தரம்

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைமை அலுவலகம் கமலாலயத்தில் கலந்து கொண்டேன் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகள்

மதுக்கடைகள்

கோயில்கள் இல்லை, மதுக்கடைகள் எதற்கு?
தமிழக அரசே! தமிழக அரசே!! மதுக்கடைகளை திறக்காதே
தமிழக அரசே! தமிழக அரசே!! ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே. தொற்று அதிகமாக இருக்கும்போது #TASMAC கடைகளை திறக்க உத்தரவிட்டிருக்கும் தமிழக அரசை கண்டித்தும் #டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மண்டல் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன் என பாஜகவின் எச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலம்

மாநிலம்

தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெறும் மாநிலம் தழுவிய டாஸ்மாக் மது கடைகளை திறக்கும் திமுக அரசின் முடிவை எதிர்த்து என்னுடைய வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினேன்...உடன் எங்கள் பகுதி ஒன்றிய பொறுப்பாளர் திரு . டில்லி.. என பாஜக மூத்த நிர்வாகியும் வழக்கறிஞருமான கே டி ராகவன் பதிவிட்டுள்ளார்.

நிரந்தரமாக மூடு

நிரந்தரமாக மூடு


தமிழக அரசே !! டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடு என எம்எல்ஏ எம் ஆர் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் குறித்து கவலைப்படாத முதல்வர்

மக்கள் குறித்து கவலைப்படாத முதல்வர்

மக்களை குறித்து கவலைப்படாமல் ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
TN BJP leaders protest against Tasmac opening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X