சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை காயத்ரி ரகுராம்- இசையமைப்பாளர் தீனா தயாரிப்பில் தமிழக பாஜகவின் வெற்றிவேல் வீரவேல் பாடல் ரிலீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: "வெற்றிவேல் வீரவேல்" என்ற பாடலை தமிழக பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

கந்த சஷ்டி விவகாரத்தில் வீடுகள் தோறும் தமிழக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கைகளில் முருகன் படத்தை வைத்து பூஜை செய்து வெற்றிவேல்- வீரவேல் முழக்கங்களை எழுப்பினர்.

TN BJP releases Murugan song ring tone

இதன் பின்னர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும் போது வீரவேல், வெற்றிவேல் என முழக்கமிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஈரோட்டில் தந்தை பெரியார் சிலைக்கு காவி உடை அணிவிக்க முயன்ற நபரும் கூட வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்டபடி போலீசில் பிடிபட்டார்.

இதனிடையே தமிழக பாஜக தமது ஃபேஸ்புக் பக்கத்தில், "வெற்றிவேல் வீரவேல்" என்ற பாடலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று கமலாலயத்தில் வெளியிட்டார் மாநிலத்தலைவர் டாக்டர் எல்.முருகன்.

TN BJP releases Murugan song ring tone

இதை தயாரித்த கலை கலாச்சார பிரிவின் மாநிலத்தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோருக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் சிறிது நேரத்தில் வெற்றிவேல் வீரவேல் பாடல் ரிங்டோன் வைக்க லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும் என லிங்க் ஒன்றையும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்துள்ளது தமிழக பாஜக.

1 கோடி பேர் ஒன்றாக சேர்ந்து.. உலகம் முழுக்க ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட திட்டம்.. பின்னணி! 1 கோடி பேர் ஒன்றாக சேர்ந்து.. உலகம் முழுக்க ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட திட்டம்.. பின்னணி!

English summary
Tamilnadu BJP today released Murugan song ring tone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X