சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கவுடா..வா?".. சாதி ஒழிப்பில் முன்மாதிரி அறிவாலயம்.. ஸ்டாலின் இப்படி இருக்காரே.. விளாசும் பாஜக

முக ஸ்டாலினை தமிழக பாஜக விமர்சித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நாராயணப்பா தாத்தாவிடம் "கவுடா..வா?" என்று முக ஸ்டாலின் யதார்த்தமாக கேட்க.. அது இப்போது விஸ்வரூபமாகி வருகிறது.. "ஊரை சொன்னால், சாதியை சொல்லும் அளவுக்கு சாதி அரசியலில் ஊறி திளைத்துள்ளார் ஸ்டாலின்.. சாதி பார்த்து தேர்தலில் போட்டியிட சீட் வழங்கி "சாதி ஒழிப்பில்!!!" தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்ந்த அறிவாலயத்திற்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன?" என்று திமுக தலைவர் முக ஸ்டாலினை தமிழக பாஜக வறுத்தெடுத்து ட்வீட் போட்டுள்ளது.

சில நாட்களாகவே தமிழக பாஜக - திமுக இடையேயான மோதல் வேறு வேறு காரணங்களுக்காகவும் வலுத்து வந்து கொண்டிருக்கிறது. பெரியார் சர்ச்சையை தொடர்ந்து நாராயணப்பா சர்ச்சை எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திமுக பிரம்மாண்டமான பேரணியை நடத்தியது.. டெல்லி வரை இந்த ஆர்ப்பாட்டம் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.

பேசாம வந்துடுங்க மேயரா.. ஒன்னும் கஷ்டம் இல்லை.. உதயநிதியை அசரடித்த நாராயணப்பா தாத்தா! பேசாம வந்துடுங்க மேயரா.. ஒன்னும் கஷ்டம் இல்லை.. உதயநிதியை அசரடித்த நாராயணப்பா தாத்தா!

நாராயணப்பா

நாராயணப்பா

இந்த பேரணியில், 85 வயசு நாராயணப்பா தாத்தா கலந்துகொண்டார்.. அன்றைய தினம் முழுவதும் மீடியாவில் இவரை பத்தின பேச்சுதான்.. இவரை முக ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து கவுரவப்படுத்தினார்.

கவுடாவா?

கவுடாவா?

கருணாநிதியின் சிறிய சிலை ஒன்றையும், புத்தகம் ஒன்றையும் தாத்தாவுக்கு ஸ்டாலின் பரிசாகவும் வழங்கினார். இது தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் போட்டு நெகிழ்ந்தார். இந்த வீடியோவில், நாராயணப்பாவிடம் ஸ்டாலின் உடல் நலன், குடும்பம் பற்றி விசாரிக்கிறார்.. அப்போது எந்த ஊர் என்று ஸ்டாலின் கேட்டு, "கவுடாவா" என்றும் கேட்கிறார்.. அதற்கு "ஒசூர்தான்.. கன்னடமும் பேசுவேன்" என்று நாராயணப்பா பதிலளிக்கிறார்.

போட்டோவுக்கு போஸ்

போட்டோவுக்கு போஸ்

எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் ரொம்ப கேஷூவலாகத்தான் ஸ்டாலின், தாத்தாவை பற்றி விசாரித்து, அவர் கையை பிடித்து பக்கத்தில் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்கிறார்... எனினும் இது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. தாத்தாவிடம் ஜாதியை கேட்டுவிட்டார் ஸ்டாலின்... இதுதான் திராவிடமா? ஜாதிய கட்சி என்று நிரூபித்துவிட்டது.. என்ற விமர்சனங்கள் நேற்று முதல் எழுந்து வருகின்றன.

அறிவாலயம்

இதைதான் தமிழக பாஜகவும் இன்று ட்விட்டரில் எடுத்து போட்டு விமர்சித்துள்ளது. "ஊரை சொன்னால், சாதியை சொல்லும் அளவுக்கு சாதி அரசியலில் ஊறி திளைத்துள்ளார்.. @mkstalin.. சாதி பார்த்து தேர்தலில் போட்டியிட சீட் வழங்கி "சாதி ஒழிப்பில்!!!" தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்ந்த @arivalayamத்திற்கு இது எல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன?" என்று காட்டமாகவே தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் என கமெண்ட்கள் குவிந்தபடியே உள்ளதுடன், இந்த வீடியோவும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

English summary
tn bjp has criticized dmk leader mk stalin about hosur member narayanappa meeting issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X