சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்!

நடிகர் ரஜினிகாந்த் மலிவான அரசியல் செய்கிறார், இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மலிவான அரசியல் செய்கிறார், இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று டெல்லி கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். தனது பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை கூறினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்விதான் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம்.

மத்தியில் இருப்பவர்களை இதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பதில் அளித்தார்

பதில் அளித்தார்

இந்த நிலையில் ரஜினியின் கருத்து பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது பாஜக தரப்பில் இருந்து முதல் முறையாக ஒருவர் இதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.சேகர் தனது பேட்டியில், ரஜினி டெல்லி வன்முறையை பார்த்து கவலையில் இருக்கிறார். அந்த கவலையில்தான் அவர் பேசி இருக்கிறார். இதில் அவர் மத்திய அரசையும், உளவுத்துறையையும் விமர்சிப்பது சரியில்லை.

கண்டனம்

கண்டனம்

இது திட்டமிடப்பட்ட கலவரமே.அரசுக்கு எதிராக நடந்த சதிச்செயல். இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ரஜினியின் இந்த விமர்சனம் தவறானது. அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நடுநிலைமை கிடையாது. ஒருசாராருக்கு சார்பாக ரஜினி பேசி இருக்கிறார். யாரையோ சமாதானம் செய்ய வேண்டும் என்று ரஜினி இப்படி பேசி இருக்கிறார்.

ரஜினி அறியாமை

ரஜினி அறியாமை

உளவுத்துறை தோற்றுவிட்டது என்று ரஜினி சொல்கிறார். அவருக்கு எதுவும் தெரியவில்லை. அவர் அறியாமையில் பேசுகிறார். மத்திய அரசைக் கண்டிப்பதும் அவருடைய அறியாமை. அவர் விரைவில் அனைத்தையும் புரிந்து கொள்வார். மற்ற அரசியல்வாதிகள் போல அவர் பேசுகிறார்.அவர் செய்வது மலிவான அரசியல். அமித் ஷாவை அவர் ராஜினாமா செய்ய சொல்கிறார்.

பாஜக ஏற்றுக்கொள்ளாது

பாஜக ஏற்றுக்கொள்ளாது

இதை ஒரு போதும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். அதுதான் இந்த கலவரத்திற்கு காரணம். மதவாத அரசியலை ஒழிக்க வேண்டும் என்று ரஜினி சொல்கிறார். அப்படி என்றால் இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திமுகவினரைத்தான் ஒழிக்க வேண்டும். ரஜினி மலிவான அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவரின் எதிர்காலத்தில் நல்லது இல்லை.

பாஜக உண்மையானது

பாஜக உண்மையானது

பாஜக உண்மையானது, சத்தியமானது. பாஜகவை ஆதரிப்பதில் தவறில்லை. பாஜகவை ஆதரிப்பதில் ரஜினி பெருமை அடைய வேண்டும். பாஜகவின் ஆதரவாளராக ரஜினி இருப்பதில் சந்தோசம் அடைய வேண்டும். ரஜினி அறியாமையில் பேசி உள்ளார். ஆனால் அவர் முழுமையாக பாஜகவை எதிர்க்கவில்லை, என்று எஸ்.ஆர்.சேகர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Tamilnadu BJP treasury condemns Rajinikanth's stand on Delhi CAA Violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X