• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த பாஜக

Google Oneindia Tamil News
  TN BJP praises DMK Vellore Kadhir Anand | கதிர் ஆனந்தை பாராட்டிய பாஜக -வீடியோ

  சென்னை: பட்டு சட்டை - வேட்டி, பூ பழங்கள், புரோகிதர்கள் மற்றும் குடும்ப சகிதமாக உட்கார்ந்திருக்கிறார் துரைமுருகன் மகன். இந்த போட்டோவை பதிவிட்டு, "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று தமிழக பாஜக ட்விட்டரில் நக்கல் அடித்துள்ளது.

  பொதுவாக, திமுகவை சேர்ந்தவர்கள் ஏதாவது கோயிலுக்கு சென்றாலோ, அல்லது பக்திமான்களாக காட்சி தந்தாலோ அது உடனடியாக விமர்சிக்கப்பட்டு விடும்.

  திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் ராஜாத்தி அம்மாள் இவர்கள் எல்லாருமே ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர். இதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார்கள்.

  ராதாபுரம் தபால் வாக்குகள் விவகாரம்.. ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து இன்பதுரை முறையீடு!ராதாபுரம் தபால் வாக்குகள் விவகாரம்.. ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து இன்பதுரை முறையீடு!

   கேள்விகள்

  கேள்விகள்

  இது சம்பந்தமான போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" என்ற கேள்வியும் கட்டாயம் கேட்கப்படும். சமீபத்தில்கூட அத்திவரதரை தரிசிக்க துர்கா ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள் காஞ்சிபுரம் சென்று வந்தார்கள். இதற்கு அடுத்த ஒரு சில தினங்களிலேயே, ஜோதிடர் பாலாஜி ஹசனை துர்கா சந்தித்து பேசிய போட்டோக்கள் வெளிவந்தன.

   கதிர் ஆனந்த்

  கதிர் ஆனந்த்

  "நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர்" என்று ஸ்டாலினும் இதை பற்றி பலமுறை விளக்கம் அளித்து விட்டார். இந்நிலையில், இன்னொரு போட்டோ தமிழக பாஜக கண்ணில் பட்டுள்ளது. திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் மகனும், வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்த்தின் போட்டோ அது.

  பூஜைகள்

  ஒரு பெரிய ஹால் போல உள்ளது. அது அவர்களது வீடா அல்லது வேறு இடமா என தெரியவில்லை (இந்த போட்டோ உண்மையானதா, போட்டோஷாப்பா என்று கூட தெரியவில்லை). பூஜைகள் நடக்க, அருகே புரோகிதர்கள் 2 பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் எதிரே, கதிர்ஆனந்த், அவரது மனைவி, குழந்தைகளுடன் உட்கார்ந்திருக்கிறார். எதிரே தட்டுகளில் பூ, பழங்கள் உட்பட பூஜை பொருட்கள் தெரிகின்றன.

   மாற்றம் ஒன்றே..

  மாற்றம் ஒன்றே..

  இந்த போட்டோவைதான் பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் போட்டுள்ளது. அத்துடன், "மாற்றம் ஒன்றே மாறாதது. அத்தகைய மாற்றத்தை தம்மில் இருந்தே துவங்குவது மேலும் சிறப்பு. கடவுளையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் நிந்தித்த @arivalayam த்தின் முன் சந்ததியினர் தவறை அறிந்துணர்ந்து, பின்வரும் தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வது பாராட்டுதலுக்கு உரியது" என்று பதிவிட்டுள்ளது.

   வாரிசுகள்

  வாரிசுகள்

  அதாவது இதற்கு முந்தைய திமுக தலைகள் எல்லாம் கடவுளை நிந்தித்துவிட்டார்கள் என்றும், அவர்களின் வாரிசுகள் இதுவரை செய்த தவறுகளை நிவர்த்தி செய்ய துவங்கி உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. பாஜகவின் இந்த கிண்டல் ட்வீட்டிற்கு திமுக தரப்பு என்ன சொல்ல போகிறதோ தெரியவில்லை.

  English summary
  TN BJP has praised DMK Vellore MP Kadhir Anand and criticized his Worship image
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X