சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.. ரஜினியால் தமிழக பாஜகவில் ஏற்பட்ட குழப்பம்.. பூசல்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக பாஜகவிற்குள் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக பாஜகவிற்குள் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்று இருக்கிறார். இதனால் தற்போது தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகி உள்ளது.

ஆனால் தமிழிசை ஆளுனராக பதவி ஏற்று ஒருவாரம் ஆன பின்பும் கூட, புதிய தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பாஜக கட்சிக்குள் நிறைய உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.

சுயமரியாதை.. திராவிட இனப்பற்று.. தமிழ் மொழிப்பற்று.. பேரறிஞர் அண்ணா தமிழகத்தில் போட்ட விதைசுயமரியாதை.. திராவிட இனப்பற்று.. தமிழ் மொழிப்பற்று.. பேரறிஞர் அண்ணா தமிழகத்தில் போட்ட விதை

ரஜினி என்ன

ரஜினி என்ன

கடந்த சில நாட்களாக தமிழக பாஜக தலைவராக ரஜினி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூட பேச்சுக்கள் அடிப்பட்டது. பாஜகவின் முடிவுகளுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்து வருகிறார். தமிழக பாஜகவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அமித் ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் அவர் தமிழக பாஜக தலைவர் ஆகிறாரா என்று கேள்விகள் எழுந்தது.

இரண்டு நிலைப்பாடு

இரண்டு நிலைப்பாடு

இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவில் இரண்டு நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. ரஜினி தலைவரானால் சிறப்பாக இருக்கும் என்று பாஜகவின் ஒரு பிரிவு கூறியுள்ளது. ஆனால் மூத்த பாஜக உறுப்பினர்கள்தான் பாஜக தலைவராக வேண்டும் என்று இன்னொரு தரப்பு கூறியுள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இப்போதைக்கு தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள். 2021க்குள் அவர் தீவிர அரசியலுக்கு வந்துவிடுவார் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் இன்னும் இரண்டு புதிய படங்களில் நடிகர் ரஜினிகாந்த் கமிட் ஆகி உள்ளார். 2021 மே வரை அவர் சினிமாவில் பிஸியாக இருப்பார்.

என்ன காத்திருப்பு

என்ன காத்திருப்பு

இதனால் ரஜினிக்காக இனியும் காத்திருக்க வேண்டாம் என்று தமிழக பாஜக கட்சி முடிவு செய்துள்ளது. அவராக அரசியலுக்கு வந்தால் வரட்டும். நாம் அழைக்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளது என்கிறார்கள். அதேபோல் அவர் தனியாக கட்சி தொடங்கினாலும் தொடங்கட்டும் என்று தமிழக பாஜக கூறியுள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதே சமயம் ரஜினியை மொத்தமாக பாஜக கைவிடவும் இல்லை. ரஜினி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் கூறி உள்ளது. ரஜினிக்கு அழுத்தம் கொடுக்காமல் அவராக கட்சிக்குள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தமிழக பாஜக மாறி உள்ளது.

உறுப்பினர்கள் ஷாக்கிங்

உறுப்பினர்கள் ஷாக்கிங்

ரஜினிக்காக பாஜக இப்படி காத்து இருந்தது கட்சிக்குள் சிறிய மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள். தமிழக பாஜகவில் நிறைய உறுப்பினர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இதனால் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, மூத்த தலைவர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.பி ராதாகிருஷ்ணன், அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரில் யாரையாவது தலைவராக நியமிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

யார் தலைவர்

யார் தலைவர்

ஆகவே தமிழக பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். கண்டிப்பாக அவர் பாஜக உறுப்பினராகத்தான் இருப்பார். இன்னும் ஒரு வாரத்தில் தமிழக பாஜக தலைவர் தேர்வு செய்யப்பட்டுவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.

தேசிய தலைவர்

தேசிய தலைவர்

தேசிய பாஜகவில் இருக்கும் சிலர் கூட தமிழக பாஜகவிற்கு தலைவராக வாய்ப்புள்ளது என்கிறார்கள். தமிழக பாஜகவினரிடம் உத்வேகம் போதவில்லை. அதனால் மற்ற மாநிலங்களில் உள்ள பாஜக தலைகள் யாரையாவது தமிழக பாஜகவிற்கு தலைவராக நியமிக்கலாம் என்று தேசிய தலைமை ஆலோசித்து வருகிறது.

English summary
TN BJP won't wait for Actor Rajini Kanth anymore says Sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X