சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒவ்வொரு பூத்திலும் பாஜகவுக்காக காத்திருந்த பூதம்.. ஷாக்கான டெல்லி!

5 தொகுதி பூத்களிலும் பாஜக வாக்கு சரிந்து காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    TN BJP - டெல்லி சென்ற அதிமுக அமைச்சர்கள்...ஆராய சொன்ன அமித்ஷா

    சென்னை: நாடு முழுக்க நம்மளை ஏத்துக்கறாங்க.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கால் ஊன்ற முடியவில்லை.. எதனால் தோற்று போனோம்.. என்ற அதிர்ச்சியில் இருந்து பாஜக தலைமை மீளவே இல்லையாம்!

    தமிழ்நாட்டுக்கு பிரச்சாரம் செய்ய அமித்ஷா வந்தார், பியூஷ்கோயல் வந்தார், மோடி வந்தார்.. இவ்வளவு பெரிய தலைகள் எல்லாம் வந்து சென்றும் பாஜக மண்ணை கவ்வியது.

    இதனால் உங்களால்தான் தோற்றோம் என்று அதிமுகவும், பாஜகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த தோல்வியை எதிர்பார்க்காத பாஜக தலைமையோ, எதனால் தோற்றோம் என்று விளக்கம் சொல்லுங்கள் என்று தமிழக பாஜகவை கேட்டுக் கொண்டது.

    தொண்டர்கள்

    தொண்டர்கள்

    உடனே மாநில தலைமையும், "எங்களுக்கு கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தரவில்லை. குறிப்பாக அதிமுக எங்களுக்காக பிரச்சாரம் செய்யவில்லை, அக்கட்சி தொண்டர்கள் ஓட்டு போடவில்லை" என்று குறை குறையாக சொன்னார்கள்.

    உழைத்தோம்

    உழைத்தோம்

    இன்னொரு பக்கம் அதிமுக சார்பில் சென்று விளக்கம் தரப்பட்டது. "பாஜக வெற்றிக்காக நாங்கள் பிரச்சாரம் செய்தோம். ஓபிஎஸ்தான் குழப்பம் பண்ணிட்டு இருந்தாரே தவிர, நாங்கள் பாஜக வெற்றிக்காக உழைத்தோம்" என்று விளக்கம் சொன்னார்கள்.

    காரணம்

    காரணம்

    நேற்றுகூட இரு அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் பியூஷ்கோயலை சந்தித்தபோதுகூட இந்த விளக்கத்தை திரும்ப திரும்ப சொன்னார்களாம். ஆனால் இவர்கள் இருவருமே அதிமுக சொன்ன காரணத்தை ஏற்கவில்லை போல தெரிகிறது.

    வாக்கு நிலவரம்

    வாக்கு நிலவரம்

    குறிப்பாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரவேண்டும் என்று சொல்லிவிட்டு போன அமித்ஷா தேர்தல் தோல்வி குறித்து ஆராய விரும்பினார். அதனால் போட்டியிட்ட 5 பேரும், தங்கள் தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுகள் வாங்கினார்கள், வாக்கு சாவடி நிலவரம், உள்ளிட்ட பல விவரங்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அதன்படியே, பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் கள ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 5 தொகுதிகளிலுமே பாஜகவுக்கு செம ஷாக் காத்திருந்தது. பாஜகவுக்கான ஓட்டுக்கள் கண்ணிலேயே படவில்லை என்று கூறப்படுகிறது.

    டென்ஷன்

    டென்ஷன்

    முன்னணி வாக்கு நிலவரங்களை பார்த்து தலைசுற்றி போய்விட்டதாம் பாஜக தலைமை. ஒரு பூத்தில் கூட கணிசமான ஓட்டு பாஜகவுக்கு இல்லையாம். ஏற்கனவே டென்ஷனில் இருந்த பாஜக தலைமை, 5 தொகுதி பூத் விவரங்களை கேட்டதும் இன்னும் கடுப்பாகி உள்ளதாக தெரிகிறது. அதனால் எப்படியும் கெடுபிடி உத்தரவுகள் அமித்ஷா மூலம் எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலை உள்ளதாக தெரிகிறது!

    English summary
    The TN BJP is said to have not received too much votes in the polling booths. As a result, Amit shah seems to be in shock
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X