சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக சட்டசபையில் பிப்ரவரி 14-ல் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்ரவரி 14-ந் தேதி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

நடப்பாண்டின் முதலாவது சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.

TN budget to be presented on February 14

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இத்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-ந் தேதி பேசினார்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் சபைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் நடப்பு கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 9-ந் தேதி மறுதேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 14-ந் தேதி தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார் என சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Deputy Chief Minister and finance minister O Panneerselvam will present the state budget for 2020-2021 in the Assembly on February 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X