சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவ படிப்பு சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு- தமிழக அமைச்சரவை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர ஓ பன்னீர்செலவ்ம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

TN Cabinet meeting chaired by Chief Minister edappadi this evening, important announcement may come for south districts

இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் ரூ5,000 கோடி அளவுக்கு தொழில் முதலீடு செய்யும் நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை மணி நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தலாம்? கைட்லைன் வெளியிட்ட மத்திய அரசுஎந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை மணி நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தலாம்? கைட்லைன் வெளியிட்ட மத்திய அரசு

தற்போது கிராம புறங்களில் 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட கோயில்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கூட்டத்தில் கோயில்கள் திறப்பை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவு படுத்தலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

English summary
Tamil Nadu Cabinet meeting chaired by Chief Minister edappadi Palanisamy this evening, important announcement may come for south districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X