சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திப்பதற்காக தமிழக முதல்வரும் அதிமுக முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

TN Chief Minister Edappadi Palaniswami to visit Delhi on Monday

ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என பாஜக கூறி வருகிறது. அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறுமா? என்பது உறுதியாகவும் இல்லை.

இந்நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பின் போது புயல் நிவாரண நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த உள்ளார்.

104-வது பிறந்தநாள்... அ.தி.மு.க அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை! 104-வது பிறந்தநாள்... அ.தி.மு.க அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

மேலும் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க மோடிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் சட்டசபை தேர்தல், சசிகலா விடுதலைக்குப் பின் அதிமுக நிலைமை உள்ளிட்டவை குறித்தும் மோடி, அமித்ஷா, நட்டாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் எனவும் தெரிகிறது.

English summary
TN Chief Minister Edappadi Palaniswami will visit to Delhi on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X