சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்துக்கு சேவை செய்ய.. வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனக்கு சேவை வாய்ப்பு வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 '5' நிமிஷத்தில்.. கனிமொழியின் 5 நாள் கவலைக்கு முற்றுப்புள்ளி - கெட்டிக்கார அண்ணன் ஸ்டாலின் '5' நிமிஷத்தில்.. கனிமொழியின் 5 நாள் கவலைக்கு முற்றுப்புள்ளி - கெட்டிக்கார அண்ணன் ஸ்டாலின்

தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பலம் வாய்ந்த அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். 33 புதிய அமைச்சர்களும் இன்று பதவிஏற்றுக் கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முத்தான 5 திட்டம்

முத்தான 5 திட்டம்

முதல்வராக பொறுப்பேற்று கொண்டதும் 5 முத்தான திட்டங்களில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கொரோனா சிகிச்சை பெறும்போது அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். தமிழகம் முழுவதும் நாளை முதல் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்,

மக்களுக்கு நன்றி

மக்களுக்கு நன்றி

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.4,000, மக்களின் குறைகளுக்கு தீர்வு காண புதிய துறை என்று முதல் நாளிலேயே அசத்தி விட்டார் ஸ்டாலின்.இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மக்களுக்கான சேவை

மக்களுக்கான சேவை

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!. காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

English summary
MK Stalin, who is in charge of Tamil Nadu, has thanked the people of Tamil Nadu for giving him the opportunity to serve
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X