• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இவர்களை பிள்ளையாக பெற என்ன தவம் செய்தார் சேலம் வெங்கடாச்சலம்.. இறையன்பு ஐஏஎஸ்சின் குடும்ப பின்னணி

|

சென்னை: தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின், தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ்சை நியமித்துள்ளார். இவரது தம்பியும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரது அண்ணன் வி. திருப்புகழ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராக உள்ளார். ஒரு தந்தையாக செங்கடாச்சலத்திற்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்.

  ஒரே வீட்டில் இரண்டு IAS அதிகாரிகள் | Irai Anbu IAS Unknown Facts

  சேலம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம், இவரது இரண்டு மகன்களுமே ஐஏஎஸ் அதிகாரிகள். அதிலும் அவரது இளைய மகன் இறையன்பு ஐஏஎஸ், தமிழக அரசின் தலைமை செயலாளராகி உள்ளார். மூத்த மகன் வி. திருப்புகழ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராக உள்ளார். இவர்களின் வீட்டில் தூய தமிழில் தான் பெயர் பலகை உள்ளது.

  சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பின்னணியில் சசிகலா? சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பின்னணியில் சசிகலா?

  வெங்கடாச்சலத்தின் மகனான இறையன்பு நன்கு படித்து விவசாயத்தில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் உட்பட 8க்கும் மேற்பட்ட பட்டங்களை பெற்றவர் இறையன்பு ஐஏஏஸ். குடியுரிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தை பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனவர்.

  ஆரம்ப கால பொறுப்புகள்

  ஆரம்ப கால பொறுப்புகள்

  இறையன்பு ஐஏஎஸ். உதவி ஆட்சியர், நாகப்பட்டினம், இணை ஆணையர், நகராட்சி நிர்வாகம், கூடுதல் ஆட்சியர், கடலூர் மாவட்டம்,, தனி அலுவலர், எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம், கூடுதல் செயலர், முதலமைச்சரின் செயலகம், செயலர், செய்தி மற்றும் சுற்றுலாத் துறை, செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து இப்போது தலைமை செயலாளர் ஆகி உள்ளார்.

  மணல் கடத்தலை தடுத்தார்

  மணல் கடத்தலை தடுத்தார்

  நிர்வாக ரீதியாக எந்த கறையும் படியாத இறையன்பு ஐஏஏஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியாற்றினார். அங்கு பணிபுரிந்த காலத்தில், மணல் கடத்தலை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.அதேபோல வெள்ளநிவாரண பணிகளில் திறமையாக செயல்பட்டு மக்களை ஈர்த்தார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, நெல் கடத்தலை தடுத்தார். கடலூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, கடலூர் சிறைகளில் சிறைவாசிகளுக்கு தொழில்திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை அளிப்பதை உறுதிசெய்தார். மரம் நடுவதை அதிகமாக ஊக்குவித்தார். பள்ளிகள், மருத்துவமனைகள் என பொது இடங்களில் மரங்களை நடவேண்டும் என்றஆர்வத்தை தூண்டினார். நரிக்குறவர்களின் வாழ்க்கை மேம்பட வீடுகள் கட்டித்தரும் திட்டம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார்.

  தன்னம்பிக்கை நாயகன்

  தன்னம்பிக்கை நாயகன்

  காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக செயல்பட்ட நேரத்தில் நெசவாளர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளராக மாறாமல் கல்வியை தொடர்வதை கண்காணித்தார். பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளை கண்காணித்து, சிறப்பு வகுப்புகள் நடத்தி மீண்டும் குழந்தைகள் பள்ளிகளில் சேரவேண்டும் என்பதில் வெற்றி பெற்றார். பல்வேறு பத்திரிக்கைகள் வெற்றி நிச்சயம் என்று பொதுதேர்வுக்கு முன்பு நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தவர். படிப்பின் அருமையை மக்களுக்கு அழகாக புரிய வைத்தவர். தமிழகத்தில் ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்ட பலருக்கு இறையன்பின் புத்தகங்கள் மற்றும் சொற்பொழிவுகள் உத்வேகத்தை கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.

  குஜராத் ஐஏஏஸ் அதிகாரி

  குஜராத் ஐஏஏஸ் அதிகாரி

  இறையன்புவின் சகோதரர் திருப்புகழ் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து அவர் கவனம் பெற்றார். இப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராக உள்ளார். தமிழ் தான் செல்லப்பிள்ளையாக வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறது.

  என்ன தவம் செய்தார்

  என்ன தவம் செய்தார்

  திருப்புகழ் மற்றும் இறையன்பு ஆகியோரின் தந்தையான சேலம் வெங்கடாச்சலத்திற்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும். அற்புதமான பிள்ளைகளை வளர்த்து ஐஏஏஸ் ஆக்கி நாட்டிற்கு சேவை செய்ய அனுப்பி உள்ளார். திருவள்ளூர் எழுதிய ஒரு குரல் இவர்களின் குடும்பத்திற்கு மிகவும் பொறுத்தமாக இருக்கும்.
  "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
  என்நோற்றான் கொல்எனும் சொல்"
  தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.. இதுதான் குரலின் விளக்கம். நிச்சயம் இறையன்பு ஐஏஎஸ்சின் குடும்பத்திற்கு பொருந்தும்.

  English summary
  This is Mr. Venkatachalam, father of TN Chief Secretary V. Irai Anbu, at his residence in Salem. His elder son V. Thiruppugazh is the advisor to National Disaster Management Authority (NDMA). What a proud father he should be. Note that the name boards are in tamil.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X