சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெரினா எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை.. அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு

எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் மரியாதை செலுத்தினார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் மரியாதை செலுத்தினார்கள்.

இன்று எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. 31வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுக்க அதிமுகவினர், எம்ஜிஆர் ரசிகர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

சென்னை எம்ஜிஆர் நினைவிடத்திலும் மக்கள் பலர் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

முதல்வர் மரியாதை

முதல்வர் மரியாதை

சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் மரியாதை செலுத்தினார்கள். எம்ஜிஆர் நினைவிடத்திற்கு மாலை அணிவித்தனர்.

மக்கள் பலர்

மக்கள் பலர்

அதேபோல் அதிமுக தொண்டர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மக்கள் பலர் திரளாக வந்து நினைவிடத்திற்கு வெளியே காத்து நின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

உறுதி மொழி ஏற்பு

உறுதி மொழி ஏற்பு

அதன்பின் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதியை வாசித்தார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மக்கள் உறுதிமொழியை வாசித்தனர்.

என்ன உறுதிமொழி

என்ன உறுதிமொழி

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவை நினைவாக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்போம் ஆகிய தீர்மானங்கள் உறுதிமொழியில் இடம்பெற்று இருந்தது.

English summary
TN CM Edappadi K. Palaniswami and ADMK cadres paid tribute to MGR in Marina on his death anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X