சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம்: தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை கடற்படையின் தாக்குதலில் 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    புதுக்கோட்டை: இறந்த மீனவர்களை ஒப்படைக்க கோரிக்கை: 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்!

    புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட நிலையில் காணாமல் போயினர். இந்த நிலையில் 4 மீனவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

    TN CM announces solatium of Rs.10 lakh to familes of 4 fishermen killed by Srilanka Navy

    இலங்கை கடற்படையின் தாக்குதலில் 4 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் இக்கொடூர தாக்குதலுக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ரஜினியிடமிருந்து ரஜினியிடமிருந்து "ஜம்ப்" அடிச்ச நேரம் சூப்பர்தான்.. "லட்டு" போல பதவி தந்த திமுக.. "லக்கி" ஜோசப்!!

    அத்துடன் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்; இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன். இச்சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Chief Minister Edappadi Palaniswami has announced solatium of Rs.10 lakh to familes of 4 fishermen killed by Srilanka Navy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X