சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

WHO நிர்வாக வாரிய தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் - ஈபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2020-2021-ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற WHO நிர்வாக வாரியத்தின் 147-வது அமர்வில் ஜப்பானின் டாக்டர். ஹிரோகி நகாடானிக்குப் பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

TN CM congratulates HarshVardhan on taking over as WHO executive panel chairman

நிர்வாக வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹர்ஷவர்தன், கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிப்பதுடன்,அவர்களது கண்ணியம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலைவணங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

முதலில் நிலா காயுது...அடுத்து கட்டிப்புடி கட்டிப்புடி...என்ன பாண்ணுவாங்க பாவம்!முதலில் நிலா காயுது...அடுத்து கட்டிப்புடி கட்டிப்புடி...என்ன பாண்ணுவாங்க பாவம்!

மேலும், உங்கள் அனைவரது நம்பிக்கையால் நான் பெரிதும் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன். எங்களுக்கு அளித்துள்ள இந்தக் கவுரவம் குறித்து இந்தியாவும், எனது நாட்டு மக்களும் பெருமித உணர்வு கொள்கின்றனர்'' என்றும் ஹர்ஷவர்தன் கூறினார். அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் அனுபவங்களை ஹர்ஷவர்தன் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓபிஎஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், உலக சுகாதார அமைப்பின் @WHO நிர்வாக வாரிய தலைவராக உயரிய பொறுப்பில் நமது இந்திய திருநாட்டிலிருந்து மாண்புமிகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டர் @drharshvardhan அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister Palaniswami and Deputy CM O Panneerselvam had congratulated Union Minister Harsh Vardhan on his taking over as Chairman of WHO Executive Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X