• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நான் கோட் சூட் போட்டா உனக்கு காண்டாகும்னா அதையும் போடுவேன்டா.. கதி கலக்கும் எடப்பாடியார்

|
  Watch Video : TN CM Edapadi palanisamy wears Suit in his foreign Trip

  சென்னை: உண்மையிலேயே செமையாக இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டிரஸ் சேஞ்ச். யாருமே எதிர்பார்க்கவில்லை இதை. வைரலாகி விட்டது எடப்பாடியாரின் அமெரிக்க டிரஸ் கெட்டப்.

  எடப்பாடி பழனிச்சாமி என்றால் அது அந்த வெள்ளை வேட்டி சட்டை முகம் நிறைய புன்முறுவல், நெற்றிப் பொட்டு இதுதான். பளிச் சிரிப்புடன் வளைய வரும் தலைவர். பக்குவம் அதிகமாகி விட்ட ஒரு முதல்வர்.

  எடப்பாடியார் முதல்வராக வந்தபோது அவரை இளக்காரமாக பார்த்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் சற்றும் மனம் சுணங்காமல் அதிரடியை அமைதியாக வெளிக்காட்டி வருகிறார் எடப்பாடியார்.. அதுதான் அவரோட முதல் ஹைலைட்.

  பார்ரா.. யாருன்னு தெரியுதா.. கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. நம்ம எடப்பாடியாரா இது!

  புஸ்வாணம்

  புஸ்வாணம்

  எதிர்க் கட்சிகளை அவர் சமாளிக்கும் விதம், தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள், துரோகங்கள், முதுகு குத்தல்கள், உராய்வுகள் ஏற்படும்போதெல்லாம் அப்படியே திருப்பதி லட்டு போல ஸ்வீட்டாக எதிர்கொண்டு பூந்தியாக்கி புஸ்வாணம் போல ஊதித் தள்ளி விடுகிறார்.

  தங்கமணி

  தங்கமணி

  முதல்வருக்கு கிடைத்த தளபதிகள் அப்படி. ஒருபக்கம் வேலுமணி என்றால் மறுபக்கம் தங்கமணி.. இடையே ஜெயக்குமார். வருகிற வசவுகளை லாவகமாக எதிர்கொண்டு தூக்கி வீசி தவிடுபொடியாக்க செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி என பக்காவாக செட்டிலாகி விட்டார் எடப்பாடியார்.

  மணிகண்டன்

  மணிகண்டன்

  திமுகவை சமாளித்த விதம், சமாளிக்கும் லாவகம், தினகரனை ஒன்றுமில்லாமல் செய்த தைரியம் என எடப்பாடியார் பக்கம் ஏகப்பட்ட லிஸ்ட் இருக்கிறது. இதனால்தான மணிகண்டனை அவர் டக்கென முடிவு செய்து கப்பென தூக்கி வீச முடிந்தது. எதிர்ப்புகளே இல்லாமல்.

  கபாலி காட்சி

  கபாலி காட்சி

  இப்போது எதிர்க்கட்சிகளாக எடப்பாடியாரை சமாளிக்க முடியவில்வலை, திணறுகிறார்கள் என்பதே உண்மையாகும். இதையெல்லாம் வைத்தும், லண்டனில் அவர் போட்டிருந்த சூட் கோட் சூப்பர் டிரஸ்ஸையும் பார்க்கும்போது 'கபாலி' படத்தில் வருவது போல, "நான் கோட் சூட் போட்டா உனக்கு புடிக்காதுன்னா அதையும் போடுவேண்டா" என்று ரஜினி ஆவேசமாக சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

  லண்டனில் நம்மவர் அதிரிபுதிரியாக கோட் சூட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.. இங்கு பல பேர் அதைப் பார்த்து காண்டாகியுள்ளனர்.தமிழக அரசியலில் உண்மையிலேேயே இது செம சீன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  CM Edapadi Palanisamy have visited to Foreign countries and his get up also have changed now
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more